பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 41 பொற் சித்திரத்தை நெஞ்சுடன் நெஞ்சு இறுத்தி இறுக அனைத்த வண்ணம் சத்தைக் கூட்டி எழுந்தாள் பொன்னரசி. எடுத்த முயற்சியில் தோல்வி கண்ட சிசு வீரிட்டு அலறியது. தாய்க்காரி அப்போது மட்டும் எப்படியோ விழித்துவிட்டாள்; சீ. தூத்தேரி என்று ஏசியபின், குழந்தையை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்; காறித் துப்பினாள்! எச்சிலைத் துப்பி யவள் மீதும் அந்த எச்சிற்துளியொன்று பட்டது. கோடை மழைக்குக் கட்டியங் கூறியது கொடி மின்னல். மூன்று புதுக்கோட்டை பஸ் நிலையம் உதய சூரியனின் கருணைப் பார்வைக்கு ஆளானது. வாகன ஊர்திகளும் பிரயாணிகளும் கலந்த ஓர் அவசர-அவசியச் சூழலிலே, காலமெனும் திரி இயற்கையெனும் விளக்கிலே நின்று நிதானித்து எரிந்து கொண்டிருந்தது. முத்தி நெறி அறிந்த தவ முனியின் இதயம் போல நிர்மலமாகக் காட்சி கொடுத்தது விண். துறவு மேற்கொள்ள நெஞ்சுரம் பூண்டவன், அதே மனநிலையில் செயற்பட இயலாமல் சலனமுற்றுத் தவிப்பதைப் போன்று இருந்தது மண். விடிவெள்ளி விண்ணைத் தொட்டதும் துாற்றல் மண்ணைத் தொட்டது. பொன்ன்ரசி, சீர்குலைந்து பழுதுபட்ட நடுத்தெருத் துர்க்கையின் சிலை நிலை யில் இருந்தாள். நனைந்த மாதிரியே கிழிந்த துணி உலர்ந்துவிட்டது. அவளுடைய தளர்ந்த மனத்தில் அக்கணம் செந்நிறம் காட்டிய கேள்வி இது ஒன்று மட்டுந் தான்: நான் எத்தனையோ வாட்டி செத்து மடிஞ்சுப் பிடத் துணிஞ்சப்போலல்ெலாம் என்னோட கனா பலிக்குமிங்கிற ஆசை மனசிலே ஒடினதாலேதானே நான் உசிர் மேலேயும் ஆசைவச்சுக்கிட ஆரம்பிச்சேன்.ஆனா,