பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 45 ரவிக்கையுடன் உள் திண்ணையில் அமர்ந்தபோது, கந்தசாமியின் புகைப்படத்தின் நினைவு எழவே, அதை எடுத்து வந்து அழகு பார்த்தவாறு இருந்தாள். நிழற் படத்துக்குரியவனே நேரில் வந்ததும், அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்ல்ை. வந்தவன் அவளுடைய படத்தைக் காட்டி னான். ஆர்வம் துள்ளப் பொன்னரசி தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கந்தசாமி இளமை துள்ளும் பொன்னரசியின் அழகைப் பருகிக் கொண்டி ருந்தான். பருவமலரின் ந்ெடி மண்டைக்கு ஏறியது. அவளுடைய கண்களுடன் அவனது விழிகள அந்தரங்கம் பேசின. அவள் பிணங்கினாள். நாளைக்கு உன் கழுத் திலே தாவி கட்டப் போறவன்தானே?. சரின்னு சொல்லு, பொன்னரசி' என்று கெஞ்சினான். ஒப்ப வில்லை. கடைசியில் பலாத்காரத்தின் பிடியில் பெண்மை கருத்தழிந்தது. காலத்தின் வளர்ச்சியோடு, அவளுள் கருவும் வளர்ந்தது. செய்தி அறிந்த அவள், செய்தியை உரியவனிடம் சேர்ப்பிக்க விரைந்தபோது, ஏச்சும் பேச்சும்தான் கிடைத்தன. "நீ துப்புக் கெட்ட கள்ளி! உன்னை நானா கண்ணாலம் பண்ணிக்குவேன்?... முடியாது!’ என்று தீர்ப்பு வழங்கினான் கந்தசர்மி. அடுத்த நாள் இரவிலே அவனை மயக்கிப் பொய் நாடகம் ஆடி, பழி தீர்த்துக் கொள்ள காட்டேரியாக மாறி, வெறி கொண்டு, கூரிய கத்தி கொண்டு சென்றபோது, அவன் கடல் கடந்த தகவல்தான் கிடைத்தது! . . . . x. ..., - நடத்தை கெட்டவள் ன்னு அவப்பேர் எடுத்த பின்னாலே இனிமே நான் இந்த ஊர் நாட்டிலே தங்கவே மாட்டேன்? என்று முடிவெடுத்து, பிறந்த வீடு துறந்து, இரவோடு இரவாக கால் போன திசைக்குச் சென்றாள் பெரன்னரசி. மறுதினம் பிற்பகல் பொழுதிற் w புதுக்கோட்டையைத் தரிசித்தாள்