பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 委7 கேட்டது. குழந்தையைத் தரையில் போட்டாள். ஒளி காட்டத் தொடங்கியபின், நிலவில் அவள் நோக்கு மண்ணுக்கு ஓடியது. பச்சை ரத்தத் தின் நெற்றியிலி ருந்து குருதி வழிந்து, பூமிய்ைச் செந்நிறப்படுத்தியிருந்த பயங்கரக் காட்சிதான் அவள் பார்வைக்கு இலக்கானது. ரத்த பூமிமீது கிடந்த பச்சைப் பாலகனை ஏறெடுத்துப் பார்க்க முற்பட்டாள் வழிப்போக்கர்களின் காலடிச் சத்தம் அருகில் கேட்டது. பொன்னரசி சற்றுத் தொலை வில் இருந்த புதர்ப் பக்கமாக மறைத்து, தன் அவல நிலை யைச் செம்மைப்படுத்திக் கொண்டு வந்தவர்கள் போனதும், மறுபடியும் பழைய செம்மண் பூமிக்குத் தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றாள். குழந்தை காட்சி தரவில்லை. அதுவரை சுமையாகத் தோன்றிய அந்த இன்பச்சுமை"யின் மகிமை இப்போதுதான் அவ ளுக்குப் புரிந்தது. கங்காணி மகன் காட்டிய ஆசையிலே மோசம் போன நான் கடைசியிலே என்னோட செல்வத் தைப் பறிகொடுத்துப்பிட்டேன்ே?' என்று புலம்பினாள். குழந்தை மரித்திருக்க நியாயமில்லை என்றவரைக்கும் அவளுக்கு நம்பிக்கை பிறந்த்து. வழிப்போக்கர்கள் குழந்தையின் அழு குரல் கேட்டு எடுத்துச் சென்றிருப் பார்கள் எனவும் திட்டமிட்டாள். உடனேயே வெறி பிடித்தது போல அந்தப் பாதையில் தொடர்ந்து நடக்க லானாள், காளி போல. தவறி விழுந்த புகைப் படங்கள் அவளுடைய பார்வையில் பட்டால்தானே? பொழுது விடிந்ததுதான் கண்ட பலன்; குழந்தை கிட்ட வில்லை! அண்டைக் கிராமத்தில் மூர்ச்சை போட்டுச் சாய்ந்து விட்ட பொன்னரசியை நில்ை உணர்ந்த நல்லவர்கள் காத்துப் பேணினார்கள். ஏண்டா ராஜா என்வயத்திலே வந்து ஒண்டினேஐேய்ோ.