பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 49 உருப்புரிந்த ரத்த வெள்ளமும் அவளை ஒவ்வொரு கணமும் சாகடித்துக் கொண்டிருந்தன. அத்தகைய சித்திரவதையிலும் அவளுக்கு ஒர் ஆனந்தம் ஏற்படத் தான் செய்தது. ஆமா, நான் இப்பிடிச் சாகாமல் செத்துக்கிட்டிருப்பதுதான் நல்லது. நான் செஞ்ச மின் னிக்க ஏலாத குத்தத்துக்கு இதுதான் தகுந்த தண்டனை' பொழுது ஏறிக் கொண்டிருந்தது. மூச்சுப் பிடித்தது. எப்படியோ எழுந்தாள் பொன்னரசி. கந்தலும் கிழிசலும் கொண்ட துணி மூட்டை அவள் கக்கத்தில இருந்தது. கத்திமுனை தோலில் உரசியது. அவளது வைரியான கந்தசாமியின் படமும் அவளுடைய படமும் ஞாபகத்தில் ஓடின, அவை என்றோ எப்படியோ அவளிடமிருந்து பிரிந்து விட்ட னவே- நடந்தாள். - கீழராஜ வீதியிலிருந்து மடங்கி, சென்ற வழி வழியே மறுகி நடந்தாள் அவள். புதுக்குளம் வந்தது. படி ஏறிச் செல்ல அடி வைத்தபோது, தொங்கல் வீட்டில் கல்யாணம் நடந்ததை அறிந்து அங்கு சென்றாள்... வெள்ளை பூசிய சுவர்களும் வாழைத்தார் கட்டின காவணமும் அவளைக் கவர்ந்தன. மாப்பிள்ளையைப் பார்த்தாள். இளம் வயசுக்காரன். அவளுக்கு வேறு நினைவு பளிச்சிட்டது. 'என் கண்ணுக்கும் இன்னம் ஆறேழு வருசம் போனா இது போலக் கண்ணாலம் ஆகவேணுமே!’ - அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழைகளோடு வரிசையாக அவளும் நின்றாள். பிறகு என்ன தோன்றி யதோ, அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். நான் சாப்பிட்டு, உசிரோடிருந்து யாருக்கு என்ன ஆவப் போவுது?...என் புள்ளையை இத்தினி வருதத்துக்கு அப்பாலேயர் இனிக் கண்ணாலே காணப்போறேன் ஊரிலே ராசாங்கமாக் குடியும், குடித்தனமுமா இருக்கவேண்டிய நான். இப்பிடி