பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 53 பிடித்த மாதிரி கீழே கிடந்த பாறாங்கல்லில் மோதிக் கொண்டாள். ரத்தம் பீரிட்டுக் கொண்டிருந்தது. சிறுவன் அவளுடைய தோளைப் பற்றித் தடுத்தான். அதே சமயம் வேறொரு புதுக் குரல் கேட்டது. 'ஏம்மா, ஏம்மா?’ என்று ஓடி வந்தான் மீசைக்காரன் ஒருவன். அருகில் ரேக்ளா வண்டி நின்றது. பொன்னரசி தலை நிமிர்ந்தாள்; அந்த மனிதனைப் பார்த்தாள். விழுங்கி விடுபவள் போல முறைத்துப் பார்த் தாள். புகை நெளிந்தது. முடிச்சில் ஒளிந்திருந்த கத்தி அவள் கைக்கு வந்தது. செம்மறியாடுகளை மேய்க்கும் பையன் ஒன்றும் புரியாமல் பரக்கப் பரக்க விழித்தான்! - 'தம்பி, இந்த ஆளுதான் உன் அப்பன்!” என்றாள் அவள், வெறியுடன். 'ஆ அப்பிடியா?...' மீசைக்கார மனிதனை நோக்கிக் கைக்கம்பை வீசினான் சிறுவன். அவன் சுருண்டு விழுந்தான். நெற்றியி லிருந்து ஊற்றெடுத்த ரத்த வெள்ளம் பூமித் தாய்க்கு வைத்த குருதிக் குங்குமம் . அச்சமுறத் துலங்கிக் கொண் டிருந்தது. பொன்னரசி, என்னை மன்னிச்சிப்பிடு. இப்போதே என்னோட வந்திடு நான் உன்னைக் காப்பாத்துறேன். நம்ப மகனையும் கண்டுபிடிப்போம்...!" என்றான் அவன் பொன்னரசியின் .ை ரத்தக் காட்சியைக் கண்டது நீங்கிய அமைதி கனிந்ததோ? கத்தி நழு ---- -- னுடைய கையைப் பிடித்து அழைத்து வந்தாள். "பாவம்; த்தில் புயல் LD-4