பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மகாத்மா காந்திக்கு ஜே! ஆம்மானை, சிங்கப்பூர்ப் பணம் கண்ணை மறைச்சிடுச்சு. எங்சிட்டே புதுப்பணம் நடமாடாட்டியும், பழைய பணத்துக்கு குறைச்சல் இல்லேயே? நம்ப் மச்சு வீட்டு மானத்தைக் கட்டிக் காப்பாற்றி விட்ட தங்கமப்பா நீ?... உனக்குப் பொண்ணுக்கா பஞ்சம்? இந்தத் தையிலேயே நம்ம வீட்டிலேயும் கொட்டு மேளம் கொட்ட வச்சுப்புடு றேண்டா, மகனே!' வீறுபூண்டு பேசினார்.வேலு. வீரமணி சிரித்தான். 'தம்பி, சாப்பிட்டுப்புட்டுப் படுத்துக்க. விடிஞ்சதும், நீ சிலட்டுர் ரேக்ளாப் பந்தயத்தைப் பார்க்கிறதுக்குப் பறிஞ்சிடு. நாளைக்குக் காலம்பற நீ இங்கிட்டு இருந்தா உம் மனசு உன்னையும் தாண்டி மீறிக்கிட்டு ஏங்கித் தவிச் சுக்கிட்டிருக்கும்' - வீரமணி தலையை ஆட்டினான்! Q む。 g のQ 登0 ○○ மாப்பிள்ளை அழைப்பு முடித்தது. படகுபோல அலங் கரிக்கப்பட்ட காரிலே பவனி வந்த மாப்பிள்ள்ை முத்தையன், புதிய முறுக்கு மீசை இளம்பரிதியில் மின்ன, தோளில் டிரான்ஸிஸ்டருடன் காரிலிருந்து இறங்கி மண வறையில் அமர்ந்தான். மாப்பிள்ளையை உட்கார வைத்துவிட்டு உள்ளே விரைந்தார் சிங்கப்பூர்த் தேவர். ஆனால்... ஏன் இப்படிப் பதறுகிறாள் தேவரின் மனைவி வள்ளி யம்மை? - மச்சான், நம்ப பொண்ணைக் காணலிங்க. எல்லா நகை நட்டுகளையும் போட்டுக்கிட்டிருந்த பொண்ணு இட்டே கங்கணம் கட்டிக்கிடுறதுக்குப் புதுப் பட்டைக்