பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மகாத்மா காந்திக்கு ஜே! 'உம் மகளை எம்மவனா மடியிலே பதுக்கி வச்சிருக் கான்? எம்மவன் ரேக்ளா பந்தயம் பார்க்கப் போயிட்டா னாக்கும்!” - மணப்பந்தல் அமளி துமளிபட்டது. "எங்கேங்கறேன் கண்ணாலப் பொண்ணு' என்று அதிகாரத்தோடு கேட்டார் ரங்கூன் தேவர், தொடர்ந்து, 'முத்தையா!' என்று வீரிட்டார். ப்பொண்ணைக் காணலையாம்டா! எங்கிட்டு ஒடிப் பூடுச்சோ?... இல்லே, அந்தப் பொண்ணோட முறை மச்சான்காரன் சிறை எடுத்துக்கிட்டுப் போயிட்டானோ தெரியலே. ம்... ஏந்திருடா!... இந்தப் பெரியண்ணன் பண்ணின சின்னத்தனத்துக்கு இவனைப் பின்னாலே ஒரு கை பார்த்துக்கிடுவோம்!' மாப்பிள்ளை எழுந்து விட்டான். பெரியண்ணத் தேவர் விம்மிக் கொண்டு நின்றார். வாசலில் வந்து நின்றது ஓர் அழகான ரேக்ளா. அதில் பவளக்கொடியும் வீரமணியும். 'முத்தையா அண்ணாச்சி!... ஒரு நிமிஷம் நில்லுங்க" நான் பிறந்த மறு ஆறாம் மாசத்திலேயே பவளக்கொடி பிறந்திச்சு. அப்பவே, எனக்குத்தான் பவளக்கொடி, பவளக்கொடிக்குத்தான் நான் அப்படின்னு எங்க இரண்டு தரப்புப் பெற்றோர்களும் முடிவு செஞ்சிட்டாங்க. அந்த உறவு முறையைச் சத்தியவாக்காக நம்பி நாங்க ரெண்டு பேரும் அஞ்சு வயசிலேயே காளி ஆத்தா சந்நிதியிலே ஒருத்தருக்கொருத்தர் கையடிச்சுச் சத்தியம் பண்ணிக்கிட் டோம். ஆனா ஊடாலே முளைச்ச முதல் காளாஞ்சித் தகராறைப் பெரிசுபடுத்தி எங்க அம்மான்காரர் பவளத்தை உங்களுக்குக் கட்டிக் கொடுக்கத் துணிஞ்சிட் டார். ஆனதாலேதானுங்க, நான் என்னோட முறைப்