பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம், 63 பொண்ணு-பவளத்தை என் அம்மான் மகள் பவளத்தைச் சிறை எடுத்துக்கிட்டுப் போனேன், அதோட பரிபூரண சம்மதத்தின்பேரிலே!... நான் ஆணாகப் பொறந்தவன்... என்னைப் பறறி இந்த ஊர் நாட்டிலே எப்படியும் பேசிக் கிடலாம். பரவாயில்லே! ஆனா... எங்க பவளக்கொடி பொண்ணாகப்பொறந்ததாச்சே? அதைப்பத்தி நாளைக்கு. ஊர் உலகம் ஏசுமே? அதனாலே நாங்க ரெண்டு பேரும் புருசன் பெண்சாதியாக ஆகிறதுக்கு முன்னாடி ஓடி வந்து விட்டோம்! இது ஆத்தா பேரிலே ஆணை வச்சுப் பேச தாக்கல்! இதை நீங்க நம்புங்க. பவளத்தை ஏற்றுக்கிடுங்க. வாங்க மணவறைக்கு!...' "வீரமணி" என்று விளித்தான் முத்தையன். அவன் கண்களும் பனித்தன: தம்பி, நான் இதயம் இல்லாத பாவி இல்லே. உன்னோட பவளம் உன்னோட் பவள மாகவே எப்போதும் இருக்கட்டும்!. குறித்த முகூர்த்தத் திலே நீ உன் பவளத்துக்குத் திருப்பூட்டு!... என்னைப் பார்க்கிலும் நீயேதான் சகலத்தனை வகையிலவும் உன் பவளத்துக்குப் பொருத்தமானவன்... ம்... இன்னொரு சங்கதியையும் கேட்டுக்க. நான் நாளைக்கு வாருக்கு கிளம்பிடறேன். அழைப்பு வந்திருச்சி. இதோ, இந்த டிரான்ஸிஸ்டரிலே.' - - முத்தையன் கம்பீரமாக மணப் பந்தலைவிட்டு நடக்க லானான். பவளம் உள்ளே போனாள்! တိို ஃ ိို 'முகூர்த்த வேளை முடியப்போவுது. சீக்கிரம் மன வறையிலே வந்து குந்திக்கிடுங்க, மாப்பிள்ளை' என்று பகைகடந்த பாந்தவ்யத்தோடு கெஞ்சினார் பெரியண்ணத் தேவர்.