பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 55 என்னைப் பெரிய மனசு பண்ணித் தடுக்காதீங்க... எப்பவுமே நான் உங்க சொத்தேதான். அட்டியில்லே தான். ஆனாலும், உங்களாலெ சிறையெடுக்கப்பட்ட நான், இப்போ திரும்பி வந்திருக்கேன். உங்களுக்கேதான் வாழ்க்கைப் படவும் போறேன். ஆனாலும்... என்னை ஊர் உலகம் துய்மையானவள் அப்படின்னு ஒப்புக்கிட வேண்டாமா?' ' பவளக்கொடி தீயாகச் சிரித்தாள். * 'பவளம்! நீ தங்கம் சொக்கப் பச்சை ஆத்தா நீ! உத்தரவு தா!... நெருப்பை அண்ணச்சுப்புடுறோம் தாயே!” அழுகுரல்கள். விண்ணைச் 574.6T. 'காளி ஆத்தா!...என் பவளத்தைக் காப்பாற்ற மாட் டியா, தாயே மூத்தவளே?...சரி. நானும் என் பவளத் துக்குத் துணை போறேன்!...' வீரமணி வெறிகொண்ட நிலையில், பவளத்தைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீக் கங்குகளைச் சரண் அடைந்தபோது... பட பட வென்று நீதியின் தீர்ப்புப் போலே முழங்கத் தலைப்பட்டது வானம்: ஆமாம், அதோ மழை பொழி கிறது: . (ஆனந்த விகடன்)