பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன விகாரங்கள் நிர்த்தாட்சண்யம் கொண்ட விதி கர்ப்பவாசம் கொண்டிருந்த ஒர் அழகான, அமைதி மிக்க ஆண்டி மடம் அது. அந்த மடத்தைப் பற்றினதொரு விசேஷம் என்னவென்றால், அது ஆண்டிகள் கூடிக் கட்டிய மடம் அல்ல. ஆண்டிகள் கூடுவதற்காகக் கட்டப்பட்ட மடம்! சாமிகள் எல்லாரும் அவங்க அவங்க விச்ராந்தி யாய்க் குந்திக்கலாமே!’ என்றார். பசுபதிப் பண்டாரம். 'ஆஹா!' 'அடடே, மெதுவாய்க் குந்துங்க சாமிகளே!' என்று பசுபதிப் பண்டாரம் பொறுப்புடன் எச்சரித்தவராக, மெள்ள அடியெடுத்து வைத்து நெருங்கி, தட்டுத் தடு மாறிய வண்ணம் நின்ற அந்தகர்களான அந்த இரு ஆண்டிப் பண்டாரங்களையும் கைத்தாங்கலாக இருபுற மும் அனைத்துக்கொண்டு மூச்சுக்கூட்டிப் பற்றி, தரை யில் குந்தச் செய்து, அந்நிம்மதியின் கனிவுடன் பெருமூச் செறிந்தார் அவர். படர்ந்து இழைந்த இருளை மேலும் படர் விடாமல் செய்வதில் கங்கணம் கட்டியிருந்த பிறைநிலவின் மோகனக் கவர்ச்சியின் பின்புலத்திலிருந்த நல்லெண் ணத்தை அறியக் கொடுத்து வைக்காதவர்களாக்கி விட்டி