பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 69 இக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் நல்லக்கண்ணு சாமியாரின் முகம் சுண்டிய கோலத்தைக் கோல நிலவு சுட்டியது. அரைக்கணம் அவர் மனம் சிந்தனை வசப் பட்டது. "என்னா சாமிகள், மூச்சுக் காட்டலை?' என்று துண்டினார் சிவப்பிரகாசம். ..இப்போ நீங்கபேசின பேச்சோட சாயலை நானும் எப்பவோ, எங்கேயோ கேட்ட மாதிரி ஒரு நினைப்பு ஒடுச்சி நெஞ்சிலே. ஆமா, மெய்யாலே உங்களுக்குச் சொந்த ஊர் இந்த வட்டாரம்தானா?' என்றார் நல்லக்கண்ணு. - இதைக் கேட்டதும் சிவப்பிரகாசத்தின் உதடுகள் சுழித்தன. வெளுத்திருந்த அவை மேலும் வெளுத்து விட்டன. விரக்தி கொண்ட சிரிப்பை வெளியிட்டார். 'சாமிகளுக்கு ஏன் ஐயப்பாடு வருது: இந்தக் கிழம் சாகப் போறதுக்குள்ளாற எதுக்கு ஒரு பொய்யைச் சொல்ல னும்? உடலெடுத்துப் பட்ட பாடு பத்தாதா? எங்குரலை நீங்களும் கேட்டதாச் சொல்லுறிங்ச. இதுவும் ஒரு ஆச்சரியமேதான் சரி. உங்களுக்குப் பூர்வீகம் எது?" என்று ஆர்வம் பிரிடக் கேட்டு வைத்தார். "நமக்குத் திருச்சிப் பக்கம் வயலூர்...முருகன் ஊர்!" என்றார் நல்லக்கண்ணு பண்டாரம். அவர் பதிலைக் கவனமான கட்டுப்பாட்டுட்ன் வெளியிட்டார். ஒஹோ!...நீங்க இந்த அறந்தாங்கி ஆவணத்தாங் கோட்டை வட்டாரத்துக்கு இதுக்கு முந்தி வந்த தில்லையோ?" "ஊஹாம்! நீங்க வந்திருக்கிங்க போலே! அதாலே தான், ஆவணத்தாங் கோட்டைன்னு கேட்டதும், அது 5 سس tp