பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 71 தடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தது. விடியற் பொழுதில் தான் மிதித்த மண் அறந்தாங்கிச் சீமை என்ப தாக அறிந்து கொண்டதிலிருந்து ஆரம்பித்துப் பின் னோக்கிச் சென்று பார்த்த தருணம், மாயக் காலம் உருக் காட்டிய ஊமைச் சிரிப்பின்-சிலிர்ப்பின்-சிந்தனையின் ஆசைகள், அவலங்கள், கோலங்கள், குமைச்சல்கள், சிரிப்புகள், அழுகைகள், கனவுகள், சிதைவுகள் போன்ற பல திறப்பட்ட மன் உணர்வுகள் மன லயிப்புகளாகவும் மன விகாரங்களாகவும் பரிணாம வடிவு கண்டு தனது சிந்தைவெளியில் கூத்தாடிய விந்தையையும் அவர் உய்த் துணரத் தவறிவிடவில்லையே! - யாரோ தும்மிய சத்தம் எதிர் வாடையினின்று கேட்டது. ஈ உட்காரக் கண்டு க்ாதுகளை உலுக்கிக் கொள்ளும் காளை மாடு போல, சிவப்பிரகாசப் பண்டாரம் தலை யைக் குலுக்கிக் கொண்டார். அப்போது, "சாமிகளே, இந்தக் கட்டையும் புகை பிடிச்சா. உடம்புக்கு இந்த வாடையிலே ரொம்ப உணக்கையாய் இருக்கும்னு யோசிக்கறேன்’ என்று நல்லக்கண்ணு பண்டாரம் சொல்லி, பீடியை எடுத்துத் தடுமாறியவாறு நீட்டி, கடைசியில் சுட்டுக் கொண்டு எப்படியோ பீடியில் தீக் கங்கை உண்டு பண்ணிக் கொண்டார். புகை அலைகள் எதிரும் புதிருமாக முயங்கிப் பிரிந்தன. - 'யாரோ தும்முன சத்தம் கேட்டுச்சே?. நீங்க தும்மலையே சாமிகளே?' 'இல்லை யென்று மறுதளித்தார் நல்லக்கண்ணு. 'நினைச்சேன். அது பொம்பளை தும்மின சாடை தான்னு.என் புத்திக்கு எட்டிச்சு!" அப்படியா? நீங்க ரொம்ப சூட்சுமக்காரர்தான்! ஊரிலுள்ள பொம்புளை யாராச்சும் குளத்தை நாடி