பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 75 வாழ்க்கைப்பட்டு எப்படி இருக்குதோ, அந்த ரகசியம் அம்மையப்பனுக்குத்தான் வெளிச்சம்!... ஈஸ்வரா! எப்படியோ அது நல்லா இருந்தாச் சரி இனி அதையெல் லாம் நினைக்க எனக்கு ஏது உரிமை?” X சிவப்பிரகாச சுவாமிகள் ப்ேசி முடித்ததும், செருமத் தொடங்கி விட்டார். அவிந்த கண் அமைப்புகளினின்றும் கண்ணிர் தாரை தாரையாகப் பெருக்கெடுத்து, சொட்டுச் சொட்டாக வழிந்தது. அப்போது, நல்லக்கண்ணு பண்டாரமும் விம்ம லானார். 'அழாதீங்க சுவாமிகளே! நாம சபலத்தைக் கடந்தவங்க... சலனத்தைக் கடந்தவங்க... என் கதையும் இங்க கதையாட்டம்தான் ஒங்களைப் போலவே நானும் என் சபதத்தை நிறைவேற்றிக்கிடவே என் கண்களை அவிச்சுக்கிட்டேன். ஆமா, இது சத்தியம், சுவாமிகளே!' என்றார் அவர். வைராக்கியம் பேசியது. மண்டியிருந்த ஆவாரஞ் செடிப் பத்தைகள் சல சிலத்தன. சிவப்பிரகாசப் பண்டாரம் திகைத்தார். 'நல்லக் கண்ணு சுவாமிகளே! நீங்க... நீங்க பூர்வத்திலே சுவாமி நாதன்தானே?...ஒங்க பேச்சின் ஒரு தொனியிலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். சொல்லுங்க... நான்தான் பூர்வத்திலே முத்துலிங்கமாய் இருந்தவன். சொல்லுங்க நிசத்தை நாம ரெண்டு பேருமே பொய்யையும் கடந்தவங்க இல் லையா?' என்று விவேகத்தோடு உண்ர்ச்சி வசப்பட்டுப் பேசியவர், தட்டுத் தடுமாறிய வண்ணம் தடவித் தடவி நல்லக்கண்ணு சுவாமிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். . . . நல்லக்கண்ணு பண்டாரம் ஓ'வென்று ஒலம் பரப்பி னார். "ஆமாம் சுவாமிகளே, ஆமாம்! நான் சாமிநாதன் தான்!”