பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மகாத்மா காந்திக்கு ஜே! சிவப்பிரகாசப் பண்டாரம் அப்படியே நடுநடுங்கி னார். கைகளைத் தடுமாற்றத்துடன் விலக்கித் கொண்டு நல்லக்கண்ணு பண்டாரத்தை ஆரத் தழுவிக் கொண்டு கதறினார். ஈஸ்வரா! உன் விளையாட்டுக்கு இவ்வளவு ஊட்டம் இருக்கும்னு எங்களுக்குத் தோணுறதுக்கு இப்பு தான் வேளை வந்திருக்குது. போலே. உன் தீர்ப்புக்குக் குறுக்கே நிற்கிறதுக்கு இந்த ஆண்டிப்பண்டாரங்களுக்கு ஏது வல்லமை?” சிவப்பிரகாச சுவாமிகளின் அழுகை நிற்கவில்லை. நல்லக்கண்ணு சுவாமிகளின் கண்ணிரும் நிற்க வில்லை. "அழாதீங்க!” ஹம் 'நீங்களும் அழக் கூடாது!' அப்போது புதிய விம்மல் ஒலி கேட்டது. 'யாரோ ஒரு பெண் தேம்புற சத்தம் வருதே' "ஆம்ா அப்படித்தான் எனக்கும் தோணுது...' அப்போது. மீண்டும் விசும்பல் சத்தம் கேட்டது. விசும்பில் விளையாடிய கோலமதி, மடத்தின் எதிரே நின்று கொண்டிருந்த பூங்கிளியைச் சுட்டிக்காட்டியது. நரைச் சுருள்களிலே சீதளக் கதிர்கள் இழைந்தன. நெற்றித் திலகம் கசிந்து வழிந்தது. கழுத்தில் வெறும் கருகு மணிச்சரம் மட்டும் இழைந்திருந்தது. சுருக்கங்கள் படர்ந்த முகத்தில் அழுகைக்கிடையே அழகின் சாயலும் வேடிக்கை காட்டியது. தும்மல் தொடர்ந்தது. ஐயா. சாமிகளே!