பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 77 சுவாமிகள் இருவரும் மாயையின் இருட்டில் தவித்துச் சிலிர்த்தார்கள். அவர்களது இதயங்கள் புயல் உருக் கொண்டனவோ? r 'யாரு, பூங்கிளி குரலாட்டம் கேட்குதே?' "ஆமாங்க... அப்படியேதான் எனக்கும் கேட்குது...' பூங்கிளி அந்தச் சாமியார்களுக்கு முன்னே வந்து நின்றாள். கைகளைக் குவித்துக் கும்பிட்டபடி, கும்பிடு றேனுங்க. நான் பூங்கிளியேதானுங்க' என்றாள். நா தழுதழுத்தது. மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். - நல்லக்கண்ணு பண்டாரம் சாமிநாதனாகவும் சிவப் பிரகாச சாமியார் முத்துவிங்கமாகவும் உருமாறியதன் விளைவாக, ஒரு கணம் இருவருமே நிலைதடுமாறி, நினைவு மயங்கி, தங்களையும் மறந்தகதியில் தங்களையும் மீறி இருக்கையை விட்டு எழுந்தார்கள். எழுந்தவர்கள். ஊனக் கண்களின் இருட்டின் மாயையில் தவித்துத் தடுமாறித் தரையில், விழுந்தார்கள். உடனே, சாமி நாதனும் முத்துலிங்கமும் மறைந்தனர்... நல்லக்கண்ணு பண்டாரமும் சிவப்பிரகாச பண்டாரமும் நிலைத்தனர். பூங்கிளி அவ்விரு சுவாமிகளுக்கும் உதவி செய்ய எண்ணினாள். ஆனால், மறு இமைப்பில், அவள் அவர் களது நிதர்சனக் கோலத்தை எண்ணி அஞ்சினாள், அவளது நெஞ்சு தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. 'சுவாமிகளே! ஒங்க ரெண்டு பேரோட இந்தப் பயங்கர நிலைமைக்குச் காரண்மாயிருந்த இந்தப் பாவியை நீங்க சமிக்க வேணாம்... சமிக்கவும் மாட்டீங்க! ஒங்க ரெண்டு பேரோட நினைப்பு ஒண்ணையே துணைக்கு வச்சுக்கிட்டு அந்தரங்க சுத்தியோட இம்மாம் காலத்தையும் கன்னியாவே கழிச்சுப்புட்ட இந்தப் பூங்கிளி, ஒங்க இரண்டு பேருக்கும் தொண்டுழியம் செஞ்சு எங்கண்ணை மூடிக்கிட தவம் இருந்தேன் காளி ஆத்தா என்னோட இந்தக் கனாவைப் பலிக்க வைக்கத்தான்