பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் நேரில் வரும் அந்தத் தேதித் தாள் அப்புறம் கிழிக்கப்படவே இல்லை!... - அப்படியென்றால், காலம் மாறவில்லையென்று பொருளா? ஊஹகும்! காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவர்களைப் பொறுத்தமட்டில் மட்டும் காலம் மாறவில்லை. சுவரில் தொங்கிய காலண்டரில் கிழிக்கப்பட்ாமல் இருந்த அந்தத் தேதித் தாளை-பழுப்புப் படிந்து தூசும் தும்பட்டையுமாகத் திகழ்ந்த அந்த தேதித் தாளைக் கிழிபட்ட மனத்தோடு-கிழிபட்ட மனத்தில் ரத்தமும் பாசமுமாகப் பொங்கிப் புரண்ட மனத்தோடு பார்த் தான். பார்த்துக் கொண்டேயிருந்தான் ஆனந்தன். கனத்து வலித்த கண் விளிம்புகளினின்றும் சுடுநீர் மாலை யாக நீண்டது. எதை நினைத்தான். எதுவோ நினைவில் வந்தது. 16-10-1970 என்று அந்தத் தேதித் தாள் சுட்டிக் கர்ட்டிய வண்ணமிருந்த அந்த நாளை அவனுடைய