பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மகாத்மா காந்திக்கு ஜே! தரித்துக் கொள்ளப் போனவன், டக்கென்று நின்று, சுவர்க்கோடியின் கீழ்முனையை நோக்கி நடந்து, அந்தப் பேசும் பொற்சித்திரத்தின் நெற்றியில்-அழகு கொழித்த நெற்றியில் விபூதியையும் குங்குமத்தையும் இட்டான். "ராஜா...!ஐயோ ராஜா. தெய்வமே ஐயையோ தெய்வமே...' வெறிபூண்டு ஓலமிட்டான். பைத்தியம் பிடித்துவிட்ட மாதிரி சுசீலாவின் நடுங்கும் கைகளைப் பற்றிக் கொண்டு, சுசீ, நம்ம ராஜா நம்மகிட்டேதிரும்பி வந்து சேர்ந்திடுவான்னு இன்னமும் நீ நம்புறே அப்படித் தானே சுசி என்று சின்னப் பிள்ளை மாதிரிக் கெஞ்சும் குரலெடுத்துக் கேட்டான். மார்பை அழுந்தப் பிடித்துக் கொண்டான். சோகத்தில் தெளிந்த நம்பிக்கை அவள் இதழ்களிலே புன்னகையாகச் சுடர் தெறித்தது. 'தெய்வத்தைத்தான் இன்னமும் நான் நம்பிக்கிட்டு இருக்கேன். ஆனதாலே, நம்ம ராஜாவை அந்தத் தெய்வம் நம்பகிட்டே மீட்டுக் கொண்டாந்து பத்திரமாய் ஒப்படைச்சிடும்னு தோணுது. அத்தான்...' பெற்ற மனம் உருகி வழிந்தது, கண்களில்! காலை இளஞ்சுடரொளியில் வெண் முத்தங்கள் பளிச் சிட்டன. சனியும் பெயர்ந்திடுச்சாம்' தொடர்ந்தான். அவன் மெய்ம்மறந்தான். 'ஆஹா என்று தனக்குத் தானே சொல்லிச் சிரித்தான். புதிய ரத்தம் பெற்றவனென. அவன் திசைமடங்க முனைந்தான். என்னவோ இடித்தது. டங்கென்று அரவம் கேட்டது. அரவம் கண்ட்ாற். போன்று விழித்தான். நடை வண்டி நிலைகுப்புறக் கிடந்தது. "ராஜா.., என் கண்ணே! என் தெய்வமே...உன்னைப் பெற்ற எங்களுக்கு இனியானும் உயிர்ப் பிச்சை அளிக்க மனசு இறங்கப்படாதாடா!... ஐயோ!' விரமாகாளி சிரித்துக் கொண்டிருக்கிறாள். { () © గ్ర 総。 OE