பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 85 ராஜா... ராசா.. பெற்ற உள்ளங்கள் இரண்டும் தணல் மெழுகுகளா பினவோ?. கனவுகள் கண்டு விழிப்பவன்போல ஆனந்தன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தோடினான்: சுசீ! இதோ பார் நம்ம ராஜாவை' என்று ஆனந்தக் களி துலங்கக் கூவினான். பழைய பத்திரிகையொன்று காலில் சிக்கியது. எடுத் தான் ஆனந்தன். - இந்தப் படத்திலுள்ள ராஜா எங்கள் ஒரே குழந்தை. வீரமாகாளியம்மன் தந்த வரப் பிரசாதம். பூச்சொரியல் திருவிழாக் கச்சேரியின்பேர்து நாங்கள் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தோம். எனக்கும் என் மனைவிக்கும் நடுவில் எங்கள் கண்மணி ராஜா அமர்ந்திருந்தான். அம்மன் பேரில் பாடப்பட்ட ராகமாலிகையில், மெய்ம்மறந்திருந்த நாங்கள். சுயநினைவு பெற்றுப் பார்க்கையில் எங்கள் தெய்வத் தைக் காணவில்லை! தேடாத இடமில்லை; ராஜா இருபது சவரன் நகைகள் அணிந்திருந்தான். . - நகைகளைப் பற்றிக் கவலையே இல்லை. ஆனால், எங்கள் ராஜாவை மட்டும் யார் கண்டா லும், யார் கையில் இருந்தாலும் எங்களிடம் உயிரோடு ஒப்படைத்தால் போதும். அவர்கள் கேட்கும் பொருளைத் தட்டாமல் கொடுப்பேன். அறந்தாங்கியில் ராஜா காபி முதலாளி ஆனந்தனை யாவரும் அறிவார்கள். ஒரு உயிரைக் காட்டுவதன் மூலம் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய புண்ணி யம் கிடைக்கும்! ஆன்த்தன்சுசீலா. 6 مستنا