பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 87 'இந்தா, இது உனக்கு. இது உன் பிள்ளைக்கு' என்று சொல்வி, பிச்சையிட்டுவிட்டு, தலையை நிமிர்த்தி னாள் சுசீலா. கண்கள் கசிந்தன. பிச்சைக்காரிடன் மகன் அந்தச் சோற்றைக் கண்டது தான் தாமதம், உடனே பிஞ்சுக் கரங்களால் சாதத்தை அள்ளி அளளி வாயில் திணித்துக் கொண்டான். சுசீலாவின் மேனி நடுங்கத் தொடங்கியது. விழி களைத் துடைத்துக் கொண்டு உன்னிப்பாகப் பார்வை யைச் செலுத்தினாள். ஆ!......ராஜாவா? ஆஹா! ராஜாவேதான்! என் ராஜாவேதான்!. தெய்வ மே!’ அவளது அன்னை மனம் ஆனந்தத்தில் தவித்தது. அதே கண்கள், அதே உதடுகள்...! அதோ, இரண்டு பற்கள் கீழ் வரிசையில்!...” - அந்தக் குழந்தை சுசீலாவைப் பார்த்துக் கொண்டே யிருந்தது. எப்படிக் கறுத்து மெலிந்து விட்டது: கைக்கு ஐந்து வீதம் போட்டிருந்த ஐந்து கொலுசுகள் எங்கே? இடுப்பில் கட்டியிருந்த சலங்கைச் சங்கிலி எங்கே? கடுக்கன்கள் எங்கே? டெர்ரின் ஸ்லாக், நிஜார் எல்லாம் எங்கே? "தாயே, உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு. உன் பிள்ளை குட் டி எழுதிக் கெடக்கும்!” என்று கும்பிட்டு விட்டுக் குழந்தையும் தானுமாகப் புறப்பட்டாள் பிச்சைக்காரி. தத்தளித்தாள் சுசீலா. ஏ. பிச்சைக்காரி நில்லு! " என்றாள். - பிச்சைக்காரி நிகைத்து நின்றாள். அந்தக் குழந்தை இப்போதும் சுசீலாவை இமைக் காமல் பார்த்த வண்ணம் இருந்தது. பிச்சைக்காரி, இப்படி உள்ளே வா. பயப்படாமல் ωλJίτ! p's -