பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 89 "தாயே! உங்க மகன் தான் என் காளி' என்று தேம்பினாள் பிச்சைக்காரி. - “ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி இப்ப இருககக் கூடிய இதே கோலத்திலே பிறந்த மேனியாய் இந்தப் பிள்ளையை பட்டுக்கோட்டை நாடியம்மன் சந்நிதியிலே கண்டெடுத்தேன். என் பேச்சு சத்தியமுங்க! குழந்தை யைக கயவாடிக்கிட்டுப் போன எந்தப் பாவியோ, நகை நட்டுகளைக் கழற்றிக்கிட்டு, மனசு இரங்கி இதைக் கொல்லாமல் விட்டுப்புட்டுப் போயிருக்க வேணும்' என்றாள் அவள் - - "ராஜா தெய்வமே!’ ஆனந்தனே வந்து விட்டான். ராஜா திரும்பினான். "ப்...பா! ப்...பா!' என்று செருமினான். - "ராஜா எங்க தெய்வமே இந்தாப் பாரு உன்னை' s என்று தழுதழுக்கக கூறிய ஆனந்தன், தன் கையிலிருந்த ராஜாவின் புகைப்படத்தைக் குழந்தையிடம் காட்டி னான். ராஜா கைகொட்டிச் சிரித்தான். 'தாயே, நான் புறப்படுறேனுங்க!” என்று விம்மி னாள் பிச்சைக்காரி. "தாயே, நீ எங்க கண்ணுக்குப் பிச்சைக்காரியாகவே தோணலே. இந்தா!" என்று சொல்லி ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுக் கொத்தை நீட்டிக் கெஞ்சினாள் சுசீலா. பிச்சைக்காரி நடு நடுங்கினாள். தாயே, இந்தப் பிச்சைக்காரிக்கு இனி வேண்டியது சரண் வயிற்றுக்குப் பிடி சோறு மட்டுந்தான்...அதைத்தான் அள்ளி அள்ளிக்