பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைச் சக்தி 'விந்தையான விமரிசனம். ஆமாம்; உன் சிந்தை தடுமாறாமல் பார்த்துக்கொள். உண்மையிலேயே நீ என்னைவிட ஆடலில் சிறந்தவ்ளென்றால், நீ சற்று முன் பெண்ணுள் ஆனாகிச் சூளுரைத்தாயே, அந்தச் சூளுக்கு சவாலுக்கு-சபதத்துக்கு வெற்றி சொல்ல வேண்டுமென் ற்ால், நீ அந்தப் பார்வதியாகிவிடக் கூடாது. நினைவில் கிறுக்கி வைத்துக்கொள். உன் பேதை மனம் கிறுக்காகி விடப் போகிறது, உஷார் சிவபிரானால் சிந்தை யொடுககப்பட்ட சக்தியாகி, தில்லையில் போய் எல்லைக் கல் பதித்துவிடக்கூடாது!...நடன. உலகம் அப்பால் உன் பெயருக்குப் பாரதம்பாடி விடும். அது மட்டுமா? பரணியும் புனைந்து விடுவார்கள். நிஜமாகவே உன் விமரிசனத்திலே விந்தை என்ற சொல்லை அடைமொழி யாக்கிவிடாதே!... போட்டியிடப் போகிறவனே தன் எதிர்க்கட்சிக்காரிக்குப் பாடம் படித்துக் கொடுக்கிறானே யென்று எண்ணி அப்ப்டி உன் மீன்விழிகள் துடிக்கின்ற, னவோ சொல். உன் கண்களிடம்: நான் நாளை உன்னைச் சந்திக்கிறேன். நடன அரங்கிலே அல்ல, அல்ல! எல்லையிலாப் பெருவெளிக்கு எல்லை கிழித்துக் கிடக்கும் மய்ானத்திலே, சக்தியின் அகந்தை ஒடுக்கக் கால் மாறிக்