பக்கம்:மகான் குரு நானக்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

15


நானக்கின் தமக்கை பெயர் பீபி நானக் என்பதாகும். ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும், ஆஸ்திக்கோர் ஆண் குழந்தையும் போதுமென்ற முதுமொழிக்கேற்றவாறு பெற்றோர்கள் தங்களது இரண்டு குழந்தைகளையும் இரு கண்களாகக் கருதி வளர்த்து வந்தார்கள். குறிப்பாக, ஆண் குழந்தையான நானக்கை அளவிலா அன்புடன் பேணி காத்து வந்தார்கள்.

ஒரே ஒரு ஆண் குழந்தை அல்லவா? அதனால், அக்குழந்தை நன்றாக நடந்து, ஆடிப்பாடி, பேசும் பருவமான ஒன்பது வயது வரை வீட்டிலேயே செல்லமாக வளர்ந்து, பிறகு அதே சிற்றுரிலுள்ள பள்ளியில் பெற்றோர் கல்விக்காகச் சேர்த்தார்கள். பள்ளி ஆசிரியர் ஒர பிராமணர் ஆவார்.

நானக் பள்ளியில் சேர்க்கப்பட்ட நாளன்று, ஆசிரியர் அரிச் சுவடியின் முதல் எழுத்தை நானக்குக்குச் சொல்லிக் கொடுத்து, அதை எழுதுமாறு கூறினார். பையன் அந்த எழுத்தை எழுத வில்லை. கரும்பலகையை உற்றுப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்த சிறுவன் நானக்கைப் பார்த்து, "எழுதச் சொன்னால் எழுதாமல் உட்கார்ந்தபடியே இருக்கிறாயே ஏனப்பா" என்று அமைதியாகக் கேட்டார். பையன் வாயைத் திறக்கவில்லை.

கோபம் வந்தது ஆசியருக்கு பையனை அதட்டி "எழுதப்பா ஏன் உட்கார்ந்து கொண்டே இருக்கிறாய்? எழுது தம்பீ" என்று அதட்டியும் செல்லமாகவும் பையனை கேட்டுப் பார்த்தார் ஆசிரியர்.

உடனே பையன் நானக் 'ஐயா நீங்கள் சொல்லிக் கொடுத்த எழுத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை. இறைவன் படைத்த மூல ஒலியைப் பற்றியே சிந்திக்கிறேன்' என்றார்.

நானக் கூறிய பதிலைக் கேட்டு பள்ளி ஆசிரியர் வியப் படைந்தார். மீண்டும் அவர் நானக்கிடம், 'சிறுவனே, நீ விவரம் விளங்காத பையன். கடவுள் படைப்பைப் பற்றியும், ஏன் அதைப்