பக்கம்:மகான் குரு நானக்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

37


முட்டாள்தனமான மனிதர்கள் பேய் பிடித்தவன் என்று கூறிவிடுகிறார்கள். கடவுளுக்கு யார் பக்தனாக இருக்கிறானோ, அவனைச் சித்தப் பிரமை பிடித்த மூளைக் கோளாறுடையவன் என்கிறார்கள்" என்ற பாடலைத்தான்் நானக் அப்போது பாடினார். நானக் இவ்வாறு பாடிய பாடலைக் கேட்ட அந்த முல்லா திகைத்துவிட்டான். நாம் திவானிடம் கூறிய கருத்து இந்த மனிதனுக்கு எப்படித் தெரியும்? குரு நானக்கைப் பார்த்து, "ஐயா நீர் பேசுவது ஒரு கற்றறிந்த ஞானியைப் போல இருக்கிறது. ஆனால், முட்டாள்தனமாக நடந்து கொள்கிறீரே ஏன்?" என்றார் முல்லா.

அந்த முல்லாவின் கேள்விக்கு "இறைவன் தியானத்தில் மூழ்கியவன், தன்னை இழிவாகப் பேசுவதைக் கயமையாகவே மதிக்கிறான். அத்தகைய குணமுடையவனை அறிவில்லாதவன் என்று அழைக்க, அறியாதவனைத் தவிர வேறு யாருக்குத் துணிவு தோன்றும்" என்று நானக் பதில் கூறினார்.

உடனே முல்லா, "அப்படியானால் நீர் ஏன் மனைவி மக்கள் உள்ள இல்லற வாழ்க்கையை விட்டுவிட்டு, இந்த மயானத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்?" என்று கேட்டார்.

"அதுவா மனித இனத்திற்குத் தொண்டு செய்யத்தான்" என்றார் நானக் முஸ்லீம் இனமென்றோ, இந்து இனமென்றோ ஒன்றும் இல்லை. மனித குலத்தில் எல்லோரும் ஒன்றே! எல்லாம் இறைவனுடையவையே! மக்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு, கடைசியில் எல்லோரும் இந்த மயானத்திற்குத்தான்் வந்து சேர வேண்டும். இந்த கல்லறை மக்களது ஒருமைப்பாட்டை விளக்கும் நிரந்தரமான இடமாகும். ஆனால், மற்ற மனிதர் களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் இறந்துவிட்ட பிறகு மற்றவர்களுடைய தோளிலே ஏறிக் கொண்டு இந்த இடத்திற்கு வருவார்கள். நான், எனது சொந்தக் கால்களாலே இங்கு நடந்து வந்து விட்டேன்." என்றார் நானக்.