பக்கம்:மகான் குரு நானக்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

51


அருமை நண்பரது ஆருயிர் பிரிந்த பின்பு, சத்குரு தனது தாய் தந்தையரைப் போய் பார்த்தார். அன்றிரவே மீண்டும் தனது ஞான பயணத்தைத் துவங்கி விட்டார். சில ஆண்டுகள் சென்றன. அதற்குள் அந்த மார்க்க ஞானி வடநாடு முழுவதையும் சுற்றி வந்து விட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஒடும் வளமான ரவி நதிப் பகுதிக்கு சத்குரு நானக் சென்றார். அங்கே ஓர் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே குடியேறினார். அந்த இடம் இறைஞான வழிபாடு செய்வதற்கேற்ற இடமாக அமைந்திருந்தது. அங்கே குடியேறிக் குடும்பங்களோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு அவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

ஞான குரு நானக் குடியமர்ந்திருந்த இடத்திற்குச் சொந்தக்காரன் ஒரு வட்டிக்கடைக்காரன். அவன் பெயர் கரோரியா. தனக்கு உரிமையான இடத்தில் ஒரு சாமியார் குடியேறிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்ட அவன், மிகுந்த கோபத்தோடும், ஆத்திரத்தோடும் தனது வேலைக்காரனோடு குதிரை மேலேறி அந்த இடத்திற்குப் புறப்பட்டான்.

வட்டிக் கடைக்காரன் குதிரை வேகத்துள்ளலால் தடுமாறிக் கீழே விழுந்தது. மறுபடியும் அவன் அந்தக் குதிரையைத் தட்டிக் கொடுத்து ஏறி உட்கார்ந்தான்். குதிரை கடும் வேகமாகப் பறந்து வந்த போது, அவன் கண்பார்வை மங்கியது. அவன் நோக்கிய இடமெலாம் கருப்பாகவே தெரிந்தது. அவனது பார்வைக்கு சர்வமும் கறுப்பு மயமாகவே தென்பட்டது.

உடனே வட்டிக் கடைக்காரன் தனது குதிரையை நிறுத்திக் கொண்டு வேலைக்காரனை அழைத்து, என்னால் எல்லா வற்றையும் பார்க்க முடிகிறது. ஆனால் எல்லாமே ஒரே இருட்டாகவே இருக்கிறதே, ஏன்? என்று தனது வேலைக்காரனைக் கேட்டான்.

வேலைக்காரன், சத்குரு நானக்கின் அருமை பெருமைகளை இதற்கு முன்பே கேள்விப்பட்டிருந்தான். இருந்தாலும், தனது முதலாளியிடம் இதைப் பற்றி ஏதும் அவன் கூறவில்லை. ஒரு வேளை அவன் நானக்கின் பெருமையைப் பற்றிச் சொல்லியிருந்-