பக்கம்:மகான் குரு நானக்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மகான் குருநானக்


தவறாமல் கடைபிடிப்பார். அரேபியாவில் குருநானக் படுத்துத் துங்கிக் கொண்டிருந்தார். அவர் கால் நீட்டிக் கொண்டிருந்த திசையில் மசூதி ஒன்று இருந்தது.

அந்த ஊர் மெளலானாக்களின் சிலர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள். யாரோ ஓர் இந்து மசூதி இருக்கும் திசையின் பக்கம் தனது காலை நீட்டிக் கொண்டிருக்கிறானே என்று திடுக்கிட்டார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த மெளலானா, மசூதிக்குரிய மெளலானாவிடம் ஒடித் தகவலைத் தெரிவிக்கவே, அவர் மசூதியிலே இருந்து விரைந்து வந்து சத்குரு படுத்திருக்கும் காட்சியைக் கண்டார்.

கடுங்கோபம் வந்தது மசூதி மெளலானாவுக்கு காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் சத்குருவை வாயில் வந்தபடி ஏசினார். அத்தனை பேச்சுக்களையும் அமைதியாகப் பெற்றுக் கொண்ட குருநானக், மெளலானாவைப் பார்த்து, 'ஐயா, பெரியவரே, கடவுள் இருக்கும் திசையில் நான் காலை நீட்டிக் கொண்டிருப் பதாகக் கூறுகின்றீர். அப்படியானால், கடவுள் இல்லாத திசையில் எனது கால்களைத் திருப்பி வையுங்களய்யா' என்று கூறினார்.

குருநானக் ஓர் இந்து என்பது அப்போதுதான் புரிந்தது அந்த மெளலானாவுக்கு. அவர் மேலும் ஆத்திரமும் எரிச்சலும் அடைந்து, குரு நானக் கால்களை வேறு திசையில் கடுப்பாகத் திருப்பி வைத்தார். அந்த திசையில் மற்றொரு மசூதி காட்சி தந்தது. இதைக் கண்ட மற்ற முஸ்லிம்களும், பக்கிரிகளும் திகைத்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் மெளலானா விடவில்லை.

மறுபடியும் சத்குரு நானக்கின் இரண்டு கால்களையும் மிக எரிச்சலோடு பல திசைகளிலும் மாறி மாறித் திருப்பி வைத்தார். எந்தெந்தத் திசைகளிலே சத்குரு கால்களை மாற்றி மாற்றி திருப்பித் திருப்பி வைத்தாரோ அந்த மெளலானா, அந்த திசைகளின் பக்கங்களிலே எல்லாம் மசூதிகள் மாறி மாறி வந்து நின்று காட்சி தந்து கொண்டே இருந்தன. இதைக் கண்ட அரேபிய மக்களும், மௌலானாக்களும் திகைத்துப் பிரமிப்பு அடைந்தார்கள்.

குரு நானக் மெளலானாவைப் பார்த்து, அன்புடையவரே! ஆண்டவன் இல்லாத இடமே இல்லை! அவர் எங்கும் அங்கும்