பக்கம்:மகான் குரு நானக்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மகான் குருநானக்


கொண்டிருந்தார்கள். சத்குரு சிரித்துக் கொண்டார். அதனால் அவர் ஒரு வேடிக்கை செய்தார். போலிச் சாமியார் மேசை அருகில் சென்று 'பெரியவரே என்ன செய்கிறீர்கள்?' என்று வேடிக்கை யாகக் கேட்டார்.

'அப்பனே! விளையாட்டாக எதையும் கேட்கக் கூடாது. பிள்ளாய், தியானத்தில் மூழ்கி, மூன்று உலகங்களையும் பார்க்கிறேன். உனக்கு இது தெரியவில்லையா அப்பனே!' என்றார் சாமியார். அந்த விநாடியே சாமியார் தனது கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் மூழ்கிவிட்டார்.

அந்த நேரத்தில் சத்குரு, மர்தானாவைப் பார்த்து ஜாடை காட்டினார். உடனே சாமியார் முன்பு இருந்த மேசையைத் துக்கிக் கொண்டு போய் வேறு ஓர் இடத்தில் வைத்து விட்டார் மர்தானா நீண்ட நேரமாக காசு விழும் ஒசை கேட்கவில்லை சாமியாருக்கு. உடனே அவர் கண்களைத் திறந்து பார்த்தார். மேசையைக் காணவில்லை. எங்கே என் மேசை என்று சாமியார் அலறினார்.

அப்போது சத்குரு, 'சாமியாரே உமது மேசை மூன்று உலகங்களுக்கும் போயிருக்கிறது' என்று வேடிக்கையாகவே பதில் கூறினார்.

போலிச் சாமியார் வெட்கத்தால் தலையைக் குனிந்து கொண்டே தரையைப் பார்த்தபோது, சத்குரு சாமியாரைப் பார்த்து, உண்மையாக வாழ்வது எப்படி? என்ற வழிகளைக் கூறினார். அறிவுரையைக் கேட்டுக் கொண்ட அந்தச் சாமியார் அலகாபாத் நகரை விட்டே ஓடிப் போய்விட்டார்.

அலகாபாத் நகரை விட்டு சத்குருவும், மாணவர்களும் புறப்பட்டார்கள். காசி, கயை, பூரி போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குத் தனது சீக்கிய மத நெறிகளை வெளிப்படுத்தினார். எது உண்மையான மார்க்கம் என்பதைத் தக்கச் சான்றுகளுடன் மக்களுக்கு விளக்கியபடியே சத்குரு பூரியில் சில நாட்கள் தங்கியிருந்தார்.