பக்கம்:மகான் குரு நானக்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. சீக்கிய மதத்தை நிறுவிய சத்குரு

ந்தியாவின் தென்கோடியான தமிழ்நாட்டின் முக்கடலோரச் சங்கமக் காட்சியைக் கண்டு வியந்துபோன சத்குரு நானக், பிறகு திருவாங்கூர் அரசியாருடைய ஆன்மீகச் சந்தேகங்களைத் தீர்த்த பின்பு, பிருந்தாவனம், தில்லி போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று, தன்னுடைய சீக்கிய மதநெறிகளை மக்களுக்கு விளக்கி யுரைத்து இறுதியாக தான் நிறுவிய புனிதத் தலமான கர்தர்பூர் நகர் வந்து சேர்ந்தார்.

நீண்ட நெடும் நாட்களுக்குப் பிறகு, குருத்துவாரம் திருக்கோவிலில் மறுபடியும் கூட்டு வழிபாடு ஆரம்பமானது. மதம், சாதி பேதங்கள் பாராமல் வழிபாட்டில் மக்கள் கலந்து கொண்டார்கள். சகோதரத்தத்துவத்துடனும், எல்லாரும் ஒரே உறவினரே என்ற பண்பாட்டுக்கேற்பவும், அவர்களது சந்தேகங் களுக்குரிய கேள்விகளுக்கு தக்க பதில்களைக் கூறி, எல்லா இனமக்களையும் ஒன்றுபடுத்தி, இணைத்து உபதேச உரைகளை ஆற்றினார்.

வழிபாடு முடிந்தது. மக்கள் அவரவர் வினாக்களுக்குரிய விடைகளைப் பெற்று சத்குருவுடன் மகிழ்ச்சியைப் பங்கீடு செய்து கொண்டு உற்சாகமடைந்தார்கள்.

அப்போது கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர் கூட்டத்திலே இருந்து எழுந்து, சத்குருவை நோக்கி, குருதேவா, என் நண்பன் ஒருவன் நோயாளி. அவனை வீட்டில் விட்டு விட்டு நான் வந்திருக்கிறேன். நான் சென்றுதான் அவனுக்குரிய எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார்.

அவர் கூறியதைக் கேட்டதும், எந்த நேரத்திலும், எதற்கும், கோபப்படாத சத்குருவுக்கு அப்போது கோபம் கொந்தளித்து