பக்கம்:மகான் குரு நானக்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

85


வந்தது. அந்த பக்தரைப் பார்த்து சத்குரு "என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, நோயினால் துன்பப்படும் ஒருவரை மேலும் துன்பப்படுத்திவிட்டு வரலாமா? அவரை விடவா என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உமக்குப் பெரிதாகப் போய்விட்டது. கடவுள் உமக்கு கொடுத்த கடமையிலே இருந்து நீர் தவறி விட்டீரே நியாயமா? அது மட்டுமன்று நான் கூறும் ஆபத்துக்குதவும் பண்பையும் காற்றிலே பறக்க விட்டுவிட்டிரே! போம்! உடனே சென்று அந்த நோயாளியைக் காப்பாற்றும் அன்பரே" என்று கூறி சத்குரு அவரை அனுப்பி வைத்தார்.

ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ திறமைகளைப் பெற்றிருக்கலாம். மற்றவர்களை விட அபூர்வ அறிவுகளையும் அடைந்திருக்கலாம். அவற்றால் எந்தவித அமைதியும் அவனுக்கு ஏற்பட்டு விடாது. கடவுளை எண்ணி உருகியுருகி வழிபட்டால் தான் அந்த மனிதனுக்கு அமைதி கிடைக்கும் என்று சத்குரு தனது உபதேசம் ஒவ்வொன்றிலும் வலியுறுத்தி வந்தார்.

சத்குரு நானக் உபதேசங்கள் மக்கள் இடையே புதியதோர் எழுச்சியை உருவாக்கிக் கொண்டு வந்தமையால், பல்லாயிரக் கணக்கான மக்கள் அவருடைய சீக்கிய மதம் என்ற புதுமையான மதத்திலே சேர்ந்து இறைஞான வழிபாடுகளிலும் கலந்து கொண்டு வந்தார்கள்.

தன்னுடைய உபதேச உரையாடல்களைக் கேட்க வந்திருந்த மக்களிடையே சீக்கியர்கள் என்றால் யார்? அவர்கள் எவ்வாறு மனித குலத்தில் ஒழுக வேண்டும் என்பதற்கான இலக்கணங்களை அவர் அப்போது அறிவுரையாக, அறவுரையாக விளக்கம் தந்தார்.

  • உண்மையும், மனநிறைவும், உள்ளத்தில் இரக்கமும் உடையவரே - சீக்கியர்!
  • எவர் மீதும், எதன் மீதும் விருப்பு வெறுப்புக் காட்டாமல் அவை பற்றாமல் இருப்பவரே - சீக்கியர்!
  • எந்த உயிருக்கும், எந்த வித துன்பமும் கொடுக்காமல் வாழ்பவரே - சீக்கியர்!