பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

அறத்தின் குரல்

உலகத்தில் தருமத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவே கலி புருஷன் சகுனி, துரியோதனன் முதலியவர்களின் உருவத்தில் பிறந்திருக்கிறான்” -என்று பெரியவர்கள் வருத்தத்தோடு தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். விஷயம் இவ்வளவு தூரத்திற்கு முற்றிய பிறகும் கூட அவையில் எல்லோரினும் முதியவனாக இருந்த திருதராட்டிரன் அனுதாபத்தையும் வெளிப்படுத்தாமல் வாயையும் திறவாமல் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

இதை முதலிலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த விதுரனுக்கு அடக்க முடியாத சினம் உண்டாகிவிட்டது. அவன் திருதராட்டிரனை நோக்கிக் குமுறியெழுந்தான். அவன் விழிகள் சிவந்திருந்தன. உதடுகள் துடிதுடித்தன, “அண்ணா! உனக்குக் கண்கள் மட்டும் இல்லையா? அல்லது செவிகளும் கூட இல்லையா? இந்த அநீதியை, அக்கிரமத்தைச் செவிகளில் கேள்விப்பட்ட பின்பு கூட நீ பிடித்து வைத்த மண் பொம்மை போல இப்படி வாயையே திறக்காமல் உட்கார்ந்திருக்கலாமா? துரியோதனாதியர்களைப் போலவே பாண்டவர்களும் உனக்கு மக்கள் முறை உடையவர்கள் தாமே? உன் சொந்த மக்கள் பாண்டவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு அவர்களுக்கு இவ்வளவு தீமைகளைச் செய்வதை நீ கண்டிக்க வேண்டாமா? இம்மாதிரி வஞ்சகச் செயல்கள் எல்லாம் குருகுலத்தின் மேன்மைக்குப் பொருந்துமா? இரு சாரார்க்கும் தந்தை முறை கொண்டு முதன்மை பூண்டிருக்கும் நீயும் இவர்களுடைய சூழ்ச்சிகளுக்கெல்லாம் உடந்தையா? புறக் கண்களைப் போலவே அகக் கண்களும் குருடாகி விட்டனவா உனக்கு? ‘திரெளபதியைப் பந்தயமாக வை’ -என்று கூசாமல் வாய் திறந்து சொல்கிறான் இந்தச் சகுனி. அதை ஆமோதிப்பது போல நீயும் மௌனம் சாதிக்கிறாய். வேண்டாம் இந்தப் பழி. உடனே இந்த சூதாட்டத்தைத் தடை செய்து பாண்டவர் பொருள்களை எல்லாம் அவர்களுக்கு வாங்கிக் கொடு. இல்லையேல் குருகுலத்தின் மானம், பெருமை, புகழ் எல்லாம்