பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

அறத்தின் குரல்

ஸ்மரணையும், தியானமும் தவிரத் தனக்குரிய புறவுடலின் நினைவேயின்றித் தவஞ்செய்தான் அர்ச்சுனன். மாரியும் கோடையுமாகப் பருவங்கள் மாறி மாறி வந்தன. மாரிக் காலத்தில் மழை வர்ஷித்தது. கோடைக் காலத்தில் வெயில் வாட்டியது. குளிர் காலத்தில் குளிர் ஒடுக்கியது! ஆனால் அர்ச்சுனனுடைய தவம் குலையவில்லை. சரீரம் தளரத் தளர ஆன்ம சாதனை பெருகி வளர்ந்து கொண்டிருந்தது. போர் என்றால் காயங்கள் ஏற்படாமலா போய் விடும்? தவம் என்றால் சோதனைகள் ஏற்படுவது இயற்கை தான்.

அர்ச்சுனனுடைய கடுந்தவத்திற்கும் சோதனைகள் ஏற்பட்டன. அவன் மனத்திண்மையைப் பரிசோதனை செய்வதற்காக இந்திரன் அந்தச் சோதனைகளை ஏற்படுத்தினான். தேவருலகில் உள்ள அழகிய மாதர்களை யெல்லாம் ஒன்று திரட்டி, திலோத்தமை, ரம்பை முதலியவர்களின் தலைமையில் அனுப்பினான். நல்ல இளவேனிற் காலத்தில் மன்மதன் தென்றலாகிய தேரில் பவனி புறப்படும் சமயத்தில் திலோத்தமை முதலிய வானுலகத்து அழகிகள் இமயமலைச் சாரலுக்கு வந்தார்கள். அர்ச்சுனன் காலத்தையும் பருவத்தையும் உணராத கர்மயோகியாகத் தவத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். அவன் தவத்தைக் குலைக்கும் முயற்சியில் நளினமான உடலும் மோகக் கவர்ச்சியும் நிறைந்த அந்த வானர மகளிர் ஈடுபட்டனர். காமக்கலைக்குக் கடவுளாகிய மன்மதன் கூட அவர்களுடன் சேர்ந்து கொண்டு பூங்கணைகளை அடுத்தடுத்துத் தொடுத்தான். அவர்கள் ஆடினார்கள். பாடினார்கள், உடலைத் தீண்ட முயன்றார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. தேவ மாதர்களுக்குப் பெருந்தோல்வி. அர்ச்சுனனுடைய தவம் சிறிதளவும் சலனமுறாமல் மேலே நடந்தது. மாதர் இந்திரனிடம் சென்று கூறினர்.

இந்திரனுக்குத் தன்னையே நம்ப முடியவில்லை. அர்ச்சுனனின் தவ வலிமை அவனை ஆச்சரியக் கடலில் மூழ்கச் செய்தது. அந்த ஆச்சரியத்தில் தன் மகன் என்ற