பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

299

கொண்டு போவதற்காகத்தான் வந்திருக்கிறேன். நிபந்தனைப் படியே பாண்டவர்கள் பன்னிரண்டு வருட வனவாசத்தையும் ஒரு வருட அஞ்ஞாத வாசத்தையும் கழித்து விட்டார்கள். முன்பு நீங்கள் அளித்த வாக்கின்படி அவர்களுக்குச் சேரவேண்டிய நாடு நகரங்களைக் கொடுக்கின்றீர்களா? அல்லது பாண்டவர்கள் உங்களோடு போர் செய்து பெற்றுக் கொள்ளட்டுமா? சூதாட்டமோ, போராட்டமோ, எதுவாக இருந்தாலும் சரி; பாண்டவர்கள் தயாராக இருக்கிறார்கள். பாண்டவர்களின் வலிமையும் பேராற்றலும் உங்களுக்குத் தெரியாதவை அல்ல! மீண்டும் அவர்களுடனே போரிட்டு உங்களுக்கு நீங்களே அழிவு தேடிக் கொள்வதை விட அவர்களுக்குச் சேரவேண்டியதைக் கொடுத்துவிடுவது நல்லது. உலூகனை மரியாதையோடு வரவேற்ற துரியோதனன், இப்போது அவன் வந்த காரியத்தைக் கேட்டதும் கோபங் கொண்டு விட்டான்.

“மிகவும் நல்லது! வார்த்தைகளில் இல்லை வீரம் என்பது. பாண்டவர்களுக்கு எங்களோடு போரிட வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் போர்களத்திற்கு வந்து எதிரில் நின்று செய்யக் கருதுவதைச் செய்யலாம். இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்! இதுதான் என் விடை போய் கூறுங்கள்” என்றான் அவன். துரியோதனனின் விடையைக் கேட்ட உலூகன் விதுரனின் முகத்தைப் பார்த்தான். உடனே விதுரன் எழுந்து துரியோதனனை நோக்கி “துரியோதனா! நியாயமாக இந்தத் தூதுவர் கூறுகிறபடியே பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கொடுத்து விடுவதுதான் நல்லது, போர் எண்ணம் வேண்டாம்” என்றான். அடுத்துத் துரோணரும் கிருபாச்சாரியாரும் எழுந்து விதுரனைப் போலவே, ‘போர் வேண்டாம் என்றும், பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கொடுத்து விடுவதே தலம்’ என்றும் துரியோதனனுக்கு அறிவுரை கூறினர்.

ஆனால் துரியோதனன் இவர்களது அறிவுரைகளைச் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. அவன் அலட்சியத்தைப்