பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/393

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

391

செய்யலாம் இப்போது? அவர், இனிமேல் போர் செய்ய முடியாது’ என்று பாண்டவர்களுக்கு முன்னால் தளர்ந்து விழுந்த பின் நான் உன் பக்கம் போர் செய்து வெற்றியை வாங்கித் தருகிறேன்” என்று மறு மொழி கூறினான் கர்ணன். கூறிவிட்டு உடனே துரியோதனனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் இருப்பிடம் போய்விட்டான். துரியோதனன் அப்போதே துச்சாதனன் மூலம் கர்ணன் கூறிய செய்திகளை வீட்டுமனுக்குக் கூறி அனுப்பினான். அவற்றைக் கேட்ட வீட்டுமன் மனம் வருந்தினான்.

“அப்படியா? நான் தளர்ந்து விழுந்த பின்புதானா கர்ணன் வில்லெடுப்பான்? நாளை ஒரு நாளைக்குப் பொறுத்துக்கொள்ளச் சொல்! ஒன்றும் முடியாவிட்டால் நான் விழுந்து விடுவேன். பின்பு வெற்றியை வாங்கிக் கொடுக்க கர்ணன் வரட்டும்!” என்று விடைகூறி அனுப்பி விட்டான் வீட்டுமன். ஒன்பதாம் நாள் போரில் புதுமுறை அணிவகுப்பை மேற்கொண்டான் வீட்டுமன். துரியோதனன் களத்தின் நடுப்பகுதியிலும் ‘அலம்பசன்’ என்னும் அரக்கன் முன்னணியிலும் பகதத்தன் முதலியவர்கள் பக்கங்களிலுமாகச் ‘சாவதோபத்திரம்’ என்ற முறையில் படைகளை நிறுத்தினான். பாண்டவர்கள் தங்கள் படைகளை அகலவியூகமாக நிறுத்தினர். போர் தொடங்கியவுடன் அலம்பச அரக்கனுக்கும் வீமனுக்கும் வில்யுத்தம் ஏற்பட்டது. அலம்பசனுக்கு விற்போர் நன்றாகத் தெரியாது. வீமனை விற்போரில் சமாளிக்க முடியாத அலம்பசன் திடீரென்று வாளை உருவிக்கொண்டு வாட்போருக்கு அழைத்தான். வீமனும் வாளை எடுத்துக் கொண்டு அலம்பசனோடு வாட்போருக்குப் போனான். சிங்கத்தோடு சிங்கம் மோதுவதுபோல் அலம்பசனும் வீமனும் வாளோடு வாளும், தோளோடு தோளுமாக மோதிக்கொண்டார்கள் வாட்போரிலும் அலம்பசனுக்குத் தான் நிறையக் காயங்கள் பட்டன். உடனே அவன் வாட்போரையும் நிறுத்திவிட்டு மற்போருக்கு அழைத்தான்! வீமனும் அதை மறுக்காமல்