பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/442

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

அறத்தின் குரல்


“சொல் கண்ணா! சொல்லிவிடு! இன்னும் என்னைச் சோதனை செய்யாதே!”

‘உன் அருமைப் புதல்வனும் என் அருமை மருமகனுமாகிய அபிமன்னன் வீர சுவர்க்கம் அடைந்துவிட்டான்.” கண்ணன் கூறிய சொற்கள் செவியில் நுழைவதற்கு முன்பே அர்ச்சுனன் தேரிலிருந்து வேரற்ற மரம் போல் தரையில் சாய்ந்தான். செய்தியைக் கேள்வியுற்ற அதிர்ச்சியில் அவனுக்குப் பிரக்ஞை தவறிவிட்டது. கண்ணன் உடனே பதறிப் போய்த் தேர்தட்டிலிருந்து கீழே குதித்து அர்ச்சுனனுக்குப் பிரக்ஞை வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். மயக்கம் தெளிந்ததும் அர்ச்சுனன் கோவென்று கதறியழுதான். பலவாறு புலம்பினான். தரையில் முட்டிக் கொண்டான். ஒரே கன்றை இழந்த தாய்ப் பசுவின் நிலையை அடைந்தான். பாண்டவர் படையைச் சேர்ந்த எல்லோரும் அர்ச்சுனன் விழுந்து கிடந்த இடத்தில் துயரமே உருவாகச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அப்போது மகா முனிவராகிய வியாசர் பெருமான் அந்த இடத்திற்கு விஜயம் செய்தார். துயரத்தால் வாடி நிற்கும் யாவருடைய மனமும் ஆறுதலடையும்படி பொதுவாக ஓர் அறிவுரை வழங்கினார் அவர்.

“பந்த பாசங்களும், உறவு முறைகளும் மாயையினால் ஏற்படுகின்றவை. மனைவி, மக்கள், தாய், தந்தை, சுற்றம், எல்லாமே பொய் மயக்கம் தோன்றுமிடமும் சேருமிடமும் பரமாத்மாவின் திருவடியே. இன்பமும் துன்பமும், வெறும் அவஸ்தைகளே, மெய்ஞ்ஞானமுள்ளவர்கள் துயரங்களைக் கண்டு வருந்திக் கதறக் கூடாது. ‘இது இந்தப் பூத உலகத்தின் இயற்கை’ என்று எண்ணித் தெளிவு பெற வேண்டும். இறப்பதும் பிறப்பதும் இவ்வுலகில் புதுமை இல்லை , நடந்ததை மறந்து இனி நடக்க வேண்டியதை நினையுங்கள். உங்கள் கவலையால் அபிமன்னன் உயிர் பெறப் போவதில்லை” -என்றார் வியாசர். வியாசருடைய அறிவுரையால் பலர் மனம் தேறியது. உண்மையானாலும்