பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/473

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

471

அவனும் பாண்டவர்களை வளைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். பாண்டவர்களும் எதிர்த்துத் தாக்கினர். ஆயுதமில்லாமலே வீமன் துவந்த யுத்தம் செய்தான். அவனுடைய இரும்புப் பிடியில் சிக்கித் துரியோதனன் தம்பியர்கள் இருவர் உயிரிழந்தனர். வீமனின் செயலால் எதிர்த்தரப்பைச் சேர்ந்த அசுவத்தாமன் கோபம் கொண்டான். அவன் உடனே கடோற்கசனின் மகனை அடித்துக் கொன்றான். இதனால் ஆத்திரமடைந்த கடோற்கசன் வெகுண்டு அசுவத்தாமன் மேற் பாய்ந்தான். அசுவத்தாமனுக்கும் கடோற்கசனுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போர் செய்து கொண்டிருக்கும் சமயத்திலேயே நடுவில் ஒரு கதாயுதத்தை எடுத்துக் கடோற்கசனை ஓங்கி அடித்துக் கீழே தள்ளி விட்டான் அசுவத்தாமன். அப்படியே அவன் கீழே இருந்து எழுந்திருப்பதற்குள் அவனைக் கொன்று விடுமாறு கர்ணனின் காதருகில் இரகசியமாகக் கூறி அவனை ஏவினான் துரியோதனன். ஆனால் துரியோதனனுடைய கருத்துக்குக் கர்ணன் இணங்கவில்லை.

“அடிப்பட்டுத் தளர்ந்து தரையில் விழுந்திருப்பவனை வஞ்சகமாகக் கொல்வது போர் முறை ஆகாது” -என்று கூறிய பேசாமல் இருந்துவிட்டான். கர்ணன் தனது வார்த்தைக்கு இணங்காமற் போகவே துரியோதனன் முகம் வாடித் தொங்கிவிட்டது.

“துரியோதனா! கலங்காதே. இன்று பொழுது சாய்வதற்குள் அர்ச்சுனனைக் கொன்று தொலைக்கிறேன் பார்” - என்று ஜம்பமாகக் கூறினான் கர்ணன். அப்போது அருகில் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த கிருபாச்சாரியார், “கர்ணா! ஏன் இப்படி வீண் ஜம்பம் பேசுகிறாய்? உன்னால் அர்ச்சுனனைக் கொல்ல முடியுமா? நடக்க முடியாததை ஏன் பேசுகிறாய்?” என்று உடனே அவனைக் கேட்டார். கர்ணன் அவருக்குப் பதில் சொல்லவில்லை. அர்ச்சுனனை எதிர்த்துப் போர் செய்வதற்குப் போய்விட்டான். அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்கும் நடந்த