பக்கம்:மக்கட் செல்வம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவில்

102



கூறுவர். இதயம் என்பதற்கு 'Heart' என்ற ஆங்கிலச் சொல்லை உபயோகிப்பர். இதயம் என்பதற்கு இது பெயராக அமையினும், தமிழில் அதனினும் மேலாக உற்றறி உணர்வுடன் கலக்கும் ஒன்றையே நம்மவர் போற்றி வந்தனர். அதனால்தான் இரக்கமற்ற மனிதனை நோக்கி 'உனக்கு இதயம் இல்லையா?' எனக் கேட்கிறார்கள்; ஆங்கில முறைப்படி இதயமில்லாவிட்டால் அவன் எப்படி உயிர் வாழ முடியும்? எனினும் இங்கு இதயம் என்பது அந்த மேலை நாட்டார் இட்ட பெயரும் பொருளும் கொண்ட தாகவே கருதி நாமும் நம் மார்பில் உள்ள இதயம் (heart) தோன்றிய காலம் கருவின் நான்காவது வாரமே எனக்கொண்டு மேலே செல்வோம்.

தொடர்ந்து இரத்தக் குழாய்கள் முதலியன உருவாகின்றன. பின் பல இரத்தக் குழாய்கள் (Arteries and veins) உருவாகின்றன. பெரும்பாலும் நான்காவது வார இறுதிக்குள் சீரணிக்கும் (Digestive) உறுப்புக்களும் உருவாகும் என்பர், நுரையீரல், சுவாசப்பை முதலியன ஏறக்குறைய இதே காலத்தில் ஒன்றை ஒன்று பற்றியே உருவாகின்றன. பிறகே ஆண்-பெண் உறுப்புக்களெல்லாம் உருவாகும் என்பது அவர்கள் கண்ட முடிவு. இவ்வாறு மக்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் கரு தோன்றிய இரண்டு திங்களிலேயே தோன்றி விடுகின்றன என்றும், பின்னர் அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாகி ஒருசேர வளர்ந்து கொண்டே வருகின்றன என்றும் கொள்ளவேண்டும். அக்கருவின் வளர்ச்சி அளவை ஓர் அறிஞர் வாரக் கணக்கில் கண்டு காட்டியுள்ளார்.

27-வது நாளில் 4 மில்லி மீட்டர்
6-வது வாரத்தில்8 அல்லது 9 "
7 "" 15"
8 "" 30"