பக்கம்:மக்கட் செல்வம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை II

103


மற்றொரு அறிஞர் காட்டுவது.

5-வது வாரத்தில் 5 மில்லி மீட்டர்
6 " " 11 "
7 " " 18 "
2-வது மாத இறுதியில் 25 "
3-" " 65 "

மற்றொரு அறிஞர் 6-வது வாரத்திற்குப்பின் வாரத்துக்கு 10 மில்லி மீட்டர் அளவில் கருவளரும் என்பர். இவ்வாறு வயிற்றிடை வளரும் கரு பின் ஒன்றாக உறுபெற்றுத் தாய் உணவை, தன் உணவாகக் கொண்டு, அன்னையின் அடிவயிற்றில் மெள்ள மெள்ள வளர்ந்து முதலில் குறித்தபடி பத்துத் திங்களில் உதரமகன்று புவியில் குழந்தையாய் பிறக்கிறது.

அன்பின் அரசி!

இக் குழந்தை கருவில் வளரும் வளர்ச்சி பற்றி இன்னும் எத்தனை எத்தனையோ வகையில் இன்று மேலை நாட்டு அறிஞர்கள் அணு அணுவாக ஆராய்ந்து எழுதி வருகின்றனர். அவற்றையெல்லாம் கூறி உன்னைக் குழப்ப விரும்பவில்லை, இப்பொருள் பற்றி இங்கே இவ்வளவு போதும் என நினைக்கிறேன். இரண்டொரு நூல்களே அடிக்குறிப்பில் தந்துள்ளேன். தேவையானல் நீயே அவற்வை வாங்கிப் படி. இப்போது இது போதும், அதோ உன் குழந்தை ‘அம்மா’ என அழைக்கிறது. அள்ளி எடுத்து அணைத்துப் பாலூட்டிச் சீராட்டி மகிழ்ச்சிகொள்.

அன்புள்ள,
அப்பா.