பக்கம்:மக்கட் செல்வம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தையின் ஐம்புல நுகர்வு

105



பொதுவாக ' மனிதனின் உணர்ச்சியை மற்றவர் புரிந்து கொள்வதே கடினம். அவன் உள்ளத்தில் அரும்பும் எண்ணங்களையும் அவற்றின் வழி உருவாகும் பிற உணர்வு நிலைகளையும் மற்றவர் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. எனவே பேசத் தொடங்குமுன் பெறுகின்ற அளவற்ற மாற்றங்களையும் உணர்வுகளையும் பிறவற்றையும் அந்த இளங் குழந்தைகளிடமிருந்து நாம் அறிவது கடினம்தான். எனினும் பல மேலைநாட்டு அறிஞர்கள் நுணுகி நுணுகி ஆராய்ந்து சில நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றுள் ஒன்றிரண்டின் வழிபற்றி உனக்கு இன்று சில குறிப்புக்களை எழுதுகிறேன்.

உனது குழந்தை பிறந்த நாள் தொட்டு, இன்று வரை எந்தெந்த வகையில் மாற்றம் பெற்று வருகின்றது என்பதை நீ அறிந்து இருக்கிறாய் அல்லவா! பிறந்த பொழுது ஒன்றையும் அறியாததாய் ஏதோ பால் கொடுத்தால் குடித்து உறக்கும் நிலையில் இருந்து, மெள்ள மெள்ள உன்னைப் பார்த்து அறிந்து கொள்ளவும் சிரிக்கவும், மற்றவர்களையும் பார்த்து அறிந்து கொள்ளவும் கற்றுக்கொண்டதல்லவா! அத்துடன் வாய்க்குச் சுவையுள்ள பழச்சாறு முதலியவற்றையும் உண்ண விரும்பி நாக்கைச் சுவைக்கும் நிலையையும் நீ அறிவாய். இப்படியே குழந்தையின் ஒவ்வொரு உறுப்பும் மெள்ள மெள்ள தொழிற்படத் தொடங்குகின்றது அல்லவா? அத்துடன் தண்மை வெம்மை நிலைகளை உணர்ந்து கொள்ளவும், இருட்டு ஒளி இவற்றை உணரவும் பிறவேறுபாடுகளையும் உணரவும் தொடங்குகிறதல்லவா? இவ்வாறு புறத்துறுப்புக்களே யன்றி அகத்துணர்வும் பிறவும்கூட மெல்ல மெல்ல அரும்பி வளரத் தொடங்கும் குழந்தையின் வளர் நிலையை நன்கு அறிந்துகொள்ளல் நன்று. இவற்றைப் பற்றியெல்லாம் நம்நாட்டு அறிஞர்கள் யாரும் அதிகமாக எழுதவில்லை. என்றாலும் மேல் நாட்டிலே

7