பக்கம்:மக்கட் செல்வம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

குழந்தையின்



பல புலவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் இப்பிள்ளைமை உணர்வு பற்றியும், குழந்தையின் உள வளர்ச்சி பற்றியும் உள்ள நூல்கள் பல. அவற்றுள் ஒரு சிலவற்றையாவது நீ வாய்ப்பு நேரும்போது படிக்கவேண்டும்.

இங்கு உனக்கு இக்கடிதத்தில் அப்பிள்ளையின் உள்ள வளர்ச்சியைப் பற்றிய சில கருத்துக்களை எடுத்து விளக்கலாம் என எண்ணுகிறேன். மேல்நாட்டு அறிஞர்களில் ஒரு சிலர் தமது குழந்தைகள் பிறந்தவேளை முதல் உடன் இருந்து உடலின் புற அமைப்பிலும் உள்ள வளர்ச்சியிலும் உண்டாகின்ற பலப்பல மாறுதல்களைக் கண்டிருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னே இந்தத் துறையில் பணியாற்ற ஒரு பேராசிரியரை இங்கு உனக்கு அறிமுகப் படுத்துகின்றேன். ஜர்மன் வல்லுநராகிய பிரேயர் என்பர் சென்ற நூற்றாண்டின் பிற் பகுதியிலேயே இந்தக் குழந்தையின் அகப்புற வளர்ச்சியைப் பற்றித் தம் மொழியில் அழகாக எழுதியுள்ளார். அதை ஆங்கிலத்திலேயும் மொழி பெயர்த்துள்ளார்கள். அந்த நாளிலேயே அவர் குழந்தையில் ஆய்வு பற்றிக் கண்ட உண்மைகள் பெரும்பாலும் இந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கனவாகவே உள்ளன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே நான் உனக்குக் காட்டலாம் என நினைக்கின்றேன்.

குழந்தையின் புற வளர்ச்சி பற்றியும், உறுப்புக்களின் தோற்ற நிலைகளையும் நீயே நேரில் கண்டு கண்டு மகிழ்ந்திருக்கிறாய். அவற்றின் சிறப்புக்களையெல்லாம் நான் எனது முன்னைய கடிதங்களில் குறித்த புலவர்களும் காட்டியுள்ளார்கள். பிள்ளைத்தமிழின் செங்கீரை


*The Mind of the child. by W. PREYER, (original in Germany) Translated into English by H. W. BROWN.