பக்கம்:மக்கட் செல்வம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐம்புல நுகர்வு

109



குழந்தைகளுக்கு இயலாது. ஆழ்ந்த கருமைகலந்த நிறங்களைக் காட்டிலும் வெண்மைகலந்த இளவண்ணங்களே குழந்தைகள் மனதைக் கவர்கின்றன என்பர். நான்காம் ஆண்டிலேயே குழந்தைகள் வண்ணங்களைச் சரியாக விளக்கும் தன்மையைப் பெறுகின்றனவாம். இவ்வாறு ஆராய்ந்து பார்த்தால் குழந்தையின் பார்வை மெள்ள மெள்ள வளர்ச்சி பெறுவதையும், அண்மையில் உள்ளதையும் தூரத்தில் உள்ளதையும் அது எவ்வெவ்வாறு உணர்ந்து அறிகின்றது என்பதையும் நன்கு காண முடியும். இவற்றையெல்லாம் இங்கு உனக்கு விளக்கமாகச் சொல்லப் புகுந்தால் அதுவே ஒரு பெரும் நூலாக முடியும். ஆகவே, பார்வை பற்றி இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளுகிறேன்.

அரசி!

பார்வைக்குப்பின் குழந்தையின் கேட்டறியும் திறனைப்பற்றிச் சிறிது சொல்லலாம் என எண்ணுகிறேன். பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் பிறக்கும்போது செவிடாகத்தான் இருக்கும். ஆனால் அந்தநிலை அதிக நேரம் இருக்காது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் நல்ல பருவத்தே பிறக்கும் குழந்தைகளைக் காட்டிலும் நீண்ட நேரம் செவிடாக இருக்குமாம். அன்று பிறந்த குழந்தைக்குப் பேரொலியும் கேட்காது என்பதை ஆராய்ச்சியாளர் கண்டிருக்கின்றனர். ஒரு சில குழந்தைகளே பிறந்த நாளிலேயே ஒலியை உணர்ந்து கொள்ளுகின்றனவாம். பிறந்த இருபத்தைந்தாவது நாளில் கேட்கும் திறன் குழந்தைகளுக்கு அதிகமாகும் என்பர். ஐந்தாவது வாரத்துக்குப்பின் ஒரு சிறு ஒலியும் - பிறர் நடப்பதும்கூட - குழந்தையின் தூக்கத்தைக் கலைக்கும் வகையில், சில குழந்தைகளுக்கு அவற்றின் ஒலி கேட்கும் திறன் வளர்ச்சியுறும் போலும். ஆறாவது வாரத்-