பக்கம்:மக்கட் செல்வம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

குழந்தையின்



தில் குழந்தை தாயின் இன்னொலிப் பாடலைக் கேட்டுக் கொண்டே உறங்கும் திறன் பெற்றுவிடுகிறது. பதினோறாவது வாரத்தில் குழந்தை ஒலி உண்டாகும் திசை நோக்கித் திரும்பிப் பார்க்கும். ஐந்தாவது மாதத்தில் இவ்வொலி உணர்ச்சி நன்கு வளர்ச்சி பெற்று விடுகிறது. குழந்தை பால் உண்பதையும் விட்டுவிட்டு அந்த ஒலி வரும் திசையையே நோக்கிப்பார்க்கும். ஆம்! உன் குழந்தை இப்படி அடிக்கடி பால் குடிப்பதை நிறுத்தி விட்டு உன் தங்கை வள்ளி பாடும் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை நீ பல முறை என்னிடம் சொல்லி இருக்கிறாயல்லவா! மூன்று திங்களுக்குள்ளாக இசைகேட்டு உணரும் குழந்தையின் உணர்ச்சி அடுத்த, ஆறு திங்களில் நன்கு வளர்ச்சியுறும். இவ்வாறு குழந்தையின் ஒலி கேட்கும் அறிவு மெள்ள மெள்ள வளர்ச்சி' அடைகிறது.

அடுத்து உற்று அறிவும் உணர்வினைப் பற்றிச் சில சொல்ல நினைக்கின்றேன். குழந்தை புற உலகக் காற்றை உட்கொள்ளத் தொடங்கும். அதே வேளையில் உற்று அறிவும் அறிவையும் பெற்றுவிடுகிறது என்பர் ஆராய்வாளர். ஒருவர் அதை எடுத்து அணைத்தாலோ அன்றித் தொட்டாலோ அவற்றால் உண்டாகும் உணர்ச்சி குழந்தைக்கு உண்டு போலும். தாய் வயிற்றிலிருந்து பிறக்கும்- தரையில் விழாத-பிரசவத்தின் இடையில் உள்ள குழந்தைக்கும் கூட இந்த உற்றறியும் உணர்ச்சி உண்டு. குழந்தையின் உதடுகளே மிக எளிதாக உற்றறியும் உணர்வினை பெறும் என்கின்றனர். இளங் குழந்தை பிறந்து இருபத்திரண்டு மணி நேரத்துக்குள் அதன் உடல் உணர்ச்சி-தலை முதல் கால் வரையில்-ஒரே நிலையில் இருப்பதில்லை. மூன்று திங்களுக்குப் பிறகு குழந்தை உற்றுணரும் பண்பு நன்கு வளர்ச்சியுறும். உடல் மூழ்க ஊற்றும் வெந்நீரில் சிறு மாறுதல் உண்டானாலும் அதை