பக்கம்:மக்கட் செல்வம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐம்புல நுகர்வு

111



உணர்ந்து கொள்ளுகின்ற திறன் குழந்தைக்கு உண்டாகின்றது. அதனாலேயே நாம் ஒரே நிலையில் சூடாக வைக்காத வெந்நீரில் மூழ்கும்போது குழந்தைகள் வீறிட்டு அழுகின்றதைக் காண்கிறோம். சில சமயங்களில் இளங்குழந்தைகளும் கூடத் தட்பவெட்ப நிலையை உணர்ந்து கொள்ளுகின்றன என்பதை நீ நன்கு அறிவாய். எதிர் பாராது தரை 'ஜில்'லிட்டால்-நீராலோ மூத்திரத்தாலோ நனைத்தால்-குழந்தை அழுவதை நீ கண்டு அந்தக் குளிர்ச்சியைப் போக்கி வேறு உடையை மாற்றியிருக்கிறாய் அல்லவா!

இனி, குழந்தையின் உணவுச்சுவை அறியும் திறம் பற்றிச் சில எழுதலாம் என நினைக்கின்றேன். குழந்தைகள் பிறக்கும் நிலையிலேயே சுவை உணர்வினைப் பெற்று விடுகின்றன என்பதைப் பலவகையில் தேர்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். இனிப்பை விரும்பும் அளவு அவை கசப்பு போன்ற பிறவற்றை விரும்புவதில்லை எனவும் கண்டிருக்கிறார்கள். அவற்றின் சுவை உணரும் முறை பல வகையில் மாறுபடும் போலும். ஒருசிலர் குழந்தைகள் விரும்பும் அல்லது உணரும் சுவைத்திறன், அது நாள்தோறும் பெறுகின்ற சுவைக்கு ஏற்பவே அமையும் என்று கூறினாலும், பல சிறந்த அறிஞர்கள் அச்சுவை உணரும் திறனைக் குழந்தைகள் பிறந்ததும் இயல்பாகவே பெறுகின்றன என்றுதான் தம் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருக்கிறார்கள், தாய்ப்பாலை விரும்பிக் குடிக்கும் குழந்தைகள் சர்க்கரை கலந்த பசும் பாலைக் குடித்து அதன் சுவை கண்டபின் அதிகமாக அத்தாய்பாலை விரும்பாது, இனிய சர்க்கரைச் சுவையோடு கூடிய பசும்பாலையே விரும்புகின்றன என்பது உண்மையன்றோ! சில தாயார் தம் குழந்தைகளுக்குப் பசும்பால் போன்றவற்றைக் கொடுக்கும் போது அவை வெறுப்பதைக் காண்கிறோம். ஆனால் அப்பாலில் உள்ள குறையையோ கெட்டத