பக்கம்:மக்கட் செல்வம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

குழந்தையின்



னால் சுவை மாறிய தன்மையையோ, கொடுக்கும் தாயைக் காட்டிலும் அதைச் சுவைக்க எண்ணும் குழந்தையால் நன்கு அறியமுடிகிறது. இவ்வாறு வளர்ச்சி அடையும் நாக்கு அறியும் சுவை நாளுக்கு நாள் மெள்ள வளர்ச்சி அடைகின்றது என்பது கண்கூடு. குழந்தைகளின் சுவை அதன் சுற்றுச் சார்புக்கு ஏற்ப அமைவதும் உண்டு என்பர் சிலர்.

இன்று கடைசியாக உனக்கு நுகர்ந்து முக்கால் சுவையறியும் குழந்தையின் தன்மையைக் கூறி இக்கடிதத்தை முடிக்கலாம் என நினைக்கின்றேன். பிறந்த இளங் குழந்தைகளுக்கு முகர்ந்தறியும் ஆற்றல் இயல்பாகவே அமைந்து விடுகின்றதாம். சில பிடிக்காத மணம் அவை பிறந்த சில மணி நேரங்களில் வீசினாலும், அவற்றைத் துய்க்கமுடியாத காரணத்தால் குழந்தைகள் கண்களை இறுக மூடிக் கொள்ளுமாம். பிறந்த எத்தனை மணி நேரத்துக்குப்பின் இவ்வுணர்ச்சி உண்டாகும் என்பதைத் திட்டமாக வரையறுக்க முடியவில்லை. எப்படியும் பதினெட்டு மணி நேரத்துக்கு முன்பே இந்த நுகர்ச்சியால் வேற்று மணத்தை அக்குழந்தைகள் உணர்ந்துகொள்ளும் எனக் காட்டுகின்றனர். நன்றாக மூச்சு விடும் உடல் உரம் பெற்ற குழந்தைகளுக்கு இந்தப் புலன் உணர்வு மிக எளிதாக உண்டாகும். குருடாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த நுகர்வு உணர்ச்சி மற்றக் குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக இருக்குமாம். பதினைந்து பதினாறாவது மாதங்களில் இக்குழந்தைகளின் நுகர்வு உணர்ச்சி நன்கு வளர்ச்சி அடையும் போலும். பெரும்பாலான குழந்தைகள் அவர் தம் பெற்றோர் வாழும் சூழ்நிலைக் கேற்புவே இந்த ஐம்புல உணர்ச்சிகளைப் பெறுகின்றன. நல்ல அறிவுடைய குழந்தைகள் தம் உள்ளத்துக்கும் உரத்துக்கும் ஏற்ற வகையில் இப்புலன் உணர்வுகளை இயல்பாக வளர்க்கத் தொடங்குகின்றன என்றாலும் பெற்றோர் தம்