பக்கம்:மக்கட் செல்வம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

15.

குழந்தையின் மன வளர்ச்சி

 

அன்பின் அரசி,

குழந்தையின் புறத்துறுப்புக்கள் எவ்வெவ்வாறு தொழில்படுகின்றன என்பதைப் பற்றிச் சென்ற கடிதத்தில் ஓரளவு குறித்தேன். இன்று இக்கடிதத்தில் அகத் துறுப்பாகிய மனவளர்ச்சி பற்றியும் அதன் வழி வளர்ச்சியுறும் உணர்ச்சிகள் பற்றியும் ஓர் அளவு கூறலாமென நினைக்கின்றேன். குழந்தையின் மனஉணர்வு பையப்பைய வளர்ந்துவரும் நிலையினே நீயே உன் குழந்தை வழி கண்டுவருவாய் என்று எண்ணுகிறேன். உனது கடிதங்களில் அடிக்கடி குழந்தையின் வளர்ச்சி பற்றி எழுதி வருவது அதை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

தன் உணர்ச்சியின்றே உலகில் வந்து பிறக்கும் குழந்தைக்கு உணர்வு மெள்ள மெள்ள அரும்பி வளர்கின்றது. 'யான், எனது' என்ற இரண்டும் அற்றவரே உயர்ந்தவர்