பக்கம்:மக்கட் செல்வம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தையின் மன வளர்ச்சி

115


என்பது வள்ளுவர் போன்ற பெரியவர் தம் உள்ளக் கிடக்கை. அந்த வகையிலே கண்டால் பிறந்த பச்சை மண்ணுக்கு அந்த இரண்டு பற்றுமே கிடையாது. அதனால் தான் போலும் பிள்ளை உள்ளத்தைக் கள்ளம் கொள்ளாப் பிள்ளே உள்ளம் எனப் பாராட்டிப் பேசுகின் றனர். குழந்தையின் புற உறுப்புக்களின் அசைவுகளைக் கொண்டே அதன் உள்ளத்து உணர்ச்சியை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். விரல்களை மடக்கி அறியாத பச்சிளங் குழந்தை சில நாட்களில் விரல்களை மடக்குவ தோடு நம் விரலையும் கெட்டியாகக் பற்றிக் கொள்ளு வதைப் பார்க்கிறோம். மற்றும் அதன் கையைக் கொண்டு முகத்திலும் உடம்பிலும் தேய்ப்பதையும் பார்க்கிறோம். எனவே அந்த மாற்றம் உள்ளத்தில் அதற்கு உணர்த்தும் ஒருவகை மாற்றத்தையே நமக்குக் குறிக்கின்றது. சற்று வளர்ந்தபின் குழந்தை ஒரு பொருளைப் பற்ற நினைத்து முயன்று அப்பொருள் தன் கைக்கு எட்டாவிட்டால் அழு வதைக் காண்கிறோம். ஆகவே ஏமாற்றத்தால் - விரும்பிய பொருள் கைக்கு எட்டவில்லையே என்ற காரணத்தால்-அதன் உள்ளத்தில் மாற்றம் உண்டாகி அதன் வழி அழுகையும் தோன்றுகிறது என அறியவேண்டும். அந்த உணர்ச்சி குழந்தையின் உள்ளத்தில் வரையப் படும் உணர்வுக் கோட்டின் விளக்கமேயாகும். நாள் தோறும் குழந்தையின் மழலையிலிலும், பார்வையிலும், பிற தோற்றங்களிலும் புதுப்புது மாறுதல்களேக் காணமுடி யும். அவையெல்லாம் அக்குழந்தையின் மனவளர்ச்சியைக் காட்டுவனவே என அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு செய்துள்ளனர். அவற்றால் அக்குழந்தையின் உள்ளத்தை அறுதியிட முடியும் என்பது அவர்கள் கருத்து. குழந்தை பால் உண்பதிலும், பின் குப்புறக் கவிழ்வதிலும், தவழ்வதிலும் தளர்நடையிட்டுத் தள்ளாடித் தள்ளாடி விழுந்து எழுவதிலும்கூட அதன் உணர்ச்சியும்,