பக்கம்:மக்கட் செல்வம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

十16 குழந்தையின் அறிவு வளர்ச்சியும், முயற்சியும் நன்கு புலப்படும். சில சமயங்களில் குழந்தை எழுந்து நடக்க முயலும் காலத் தில் யாாாவது கை கொடுத்துப் பிடித்தால் அது கையைத் தள்ளிவிட்டுத் தானகவே தட்டித் தடுமாறி நடக்க நினைக் கிறதைக் காண்கிருேம். அது குழந்தையின் மனத்தின் அடிப்படையின் தன்முயற்சித் திறனேயே காட்டுகிறது. சில நல்ல குழந்தைகள் தனியாகத் தவழ்ந்தும் தளர் நடையிட்டும் தன்முயற்சியில் தலைகாட்டி நிற்கும்போது பெற்ற தாயே வந்து வாரி எடுத்து அணைத்தாலும் வெறுப்புக் கொள்வதைக் காண்கிருேம். தாயின் அர வணப்பிலே தான் துயிலும் பண்பை விரும்பும் குழந்தை, அந்த அணைப்பே தன்முயற்சிக்கு இடையூருக வரும் போது தள்ளுகின்றது. அப்போது எது எதையோகூடப் பேச நினைக்கிறது குழந்தை. ஒருவேளை 'உன் உதவி எனக்கு வேண்டாம், என் முயற்சியில் என்ன வளர விடு' என்று அது நமக்குப் புரியாத மழலை மொழியில்பேசுகின் றதோ என்றுகூட எண்ணத் தோன்றும். எனவே குழந்தை யின் அகவுணர்வாகிய மனவளர்ச்சி பெரியவர்கள் அறுதி யிட்டுக் காணமுடியாத வகையில் வளர்ந்துகொண்டே செல்லுகிறது என்னலாம். குழந்தைகள் ஆருவது மாதத்தில் உட்காருவதும், ஒன்பது அல்லது பத்தாவது மாதத்தில் தத்தித் தத்தி நடக்க முயற்சிப்பதும் இற்கை. கல்லகுழந்தைகள் இந்த நாட்களில்தான் தன்முயற்சியால் உட்கார, நடக்க முய லும், அந்தச் செயல்களுக்கு அக்குழந்தை தன் புற உறுப்புக்களோடு அகவுறுப்பாகிய மனத்தைத்தையும் தொழிற்படுத்தும் என்பர் ஆய்வாளர். நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் இப்படி உட்காருவதற்கும், கடப்பதற் கும், பழக்குவதற்கும் பல சாதனங்களையும் கருவிகளேயும் செய்துப் பயன்படுத்துகிருர்கள். தன் முயற்சியில் வெற்றி பெற நினைக்கும் குழந்தை, அவற்றை ஓரளவு பயன்படுத்