பக்கம்:மக்கட் செல்வம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன வளர்ச்சி 117. திக் கொள்ளும். என்ருலும், தன்முயற்சியில் வெற்றி கொண்ட பிறகு அவற்றை நாமே வலியத் தந்தாலும். வெறுப்பாக வேண்டாமென ஒதுக்கும். இந்த உட்காரும்நடக்கும்-முயற்சிகளைக் கண்ட புலவர்தாம் சப்பாணிப் பருவம், சிறுதேர் பருவம் போன்ற பருவங்களில் பண்னெற்றப் பாட்டிசைத்து மகிழ்ந்தார்கள். இப்படிக் குழந்தை இருந்து, எழுந்து, நடக்க நினைக்கும் முயற்சி யில் அதன் மன ஆற்றல் நன்கு புலப்படும் என்பது உறுதி. அன்பின் அரசி, - இங்கே நான் சொல்லுபவையெல்லாம் நம் குழந்தை. களிடம் நாம் அன்ருடம் காணும் நிகழ்ச்சிகள்தாம். என் ருலும் அவற்றைப் பற்றியெல்லாம் நாம் உட்கார்ந்து ஒர்ந்து ஆர்ாய்ச்சி செய்வதில்லை. அதற்கு ஏற்ற ஓய்வும் வாய்ப்பும் நமக்குக் கிடைப்பதில்லை. என்ருலும் மேலே: காட்டில் சிறந்த அறிஞர்கள் அவற்றை ஆராய்ந்து அழகிய கருத்துக்களை வெளியிட்டிருக்கிருர்கள். குழந்தையின் மனவளர்ச்சியைப் பற்றித் தமிழிலும் நல்ல நூல்கள் வெளிவரவேண்டும். நீ உன் குழந்தை வளரும்போது அதனிடம் தோன்றும் வளர்ச்சி மாறுபாடுகளைக் கண்டு கொண்டே ஒரு பெரு நூல் எழுதிவிடலாம். நீ செய். வாயா ? செய்தால் பயன் உண்டு. ஆம். உனக்கும். உலகுக்கும். இன்னுெரு புதிய கருத்தை உனக்குச் சொல்லலாம். என நினைக்கின்றேன். முன்கடிதத்தில் சுற்றுச் சார்புக்கு. ஏற்ற வகையில் குழந்தைகள் வளரும் என்று கூறினேன் அல்லவா ? ஆம் ! அந்த வகையில் பிறர் செய்வதைக் கண்டு தானும் அதுபோல் செய்யவேண்டும் எனத் துண் டும் குழந்தை உள்ளம். முன் காட்டிய தன்முயற்சியால் செயலாற்றிய நிகழ்ச்சிகளுக்கும், பிறர் செயல்கண்டு