பக்கம்:மக்கட் செல்வம்.pdf/119

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

- 18 - குழந்தையின் தொழிற்படும் நிகழ்ச்சிகளுக்கும் ஓரளவு உணர்வு இன்றி யமையாதது. மூளையின் தொழில்படு நிலை ஓரளவு செம் மைப்படுத்தப்பட வேண்டும். சில நிகழ்ச்சிகள், பார்த்துச் செய்யும்போது இயல்பாகவே முகிழ்க்கும் என்பர் அறிஞர். மன உணர்வை அதிகமாகப் பெய்யவேண்டிய இடமல்ல அது என்பர். குரங்குகள் மக்கள் செய்வதைப் போன்று செய்வதாகவும், கிளிகள் மக்களைப் போல் பேசப் பேசுவதாகவும் கதைகளே படிக்கிருேமல்லவா! அவை மன உணர்வு பெற்ரு அவ்வாறு செய்கின்றன என ஐயப்படுகிருர்கள். என்ருலும் ஓரளவு அவற்றிற்கு மன உணர்வு உண்டு என்பதை மறுக்க முடியாதே ! பார்த் துச் செய்வதற்கு நிறைமன உணர்வு தேவை இன்றேனும் ஓரளவாவது அவ்வுணர்வு தேவையே. வளரும் மன வுணர்வின் வழியேதான் குழந்தை தன் செயலே ஆற்றத் தொடங்குகின்றது என்பது பொருந்தும். - சில குழந்தைகளின் விளையாடல்களை நீ கண்டிருப் பாய். மரப் பொம்மையை வைத்துக்கொண்டு அதைக் காலிடைக் கிடத்தி ரோட்டுவது போன்றும், உடை உடுத்துவது போன்றும், உணவு அளிப்பது போன்றும் சில பெண்குழந்தைகள் செய்வதைக் காண்கிருேம். அது எதனுல் வந்தது? பெண்களுக்கே உரிய இயற்கை மன உணர்வு ஒரளவு அரும்புகின்றது. என்ருலும் அதன் தாயார் அக்குழந்தைக்குச் செய்யும் அந்தச் சிறப்புக்களே யெல்லாம் அப்பொம்மைக்கும் செய்யவேண்டும் என அது விரும்புவதால்தான். எனவே பார்த்துத் தொழில் படும் உணர்வு குழந்தைகளுக்கு அரும்புவது இயற்கையே யாகும். அதனுல்தான் குழந்தைகளின் முன் நற்செயல் களே செய்யவேண்டுமென நான் மேலே முன் ஒரு கடிதத்தில் குறித்தேன். - நல்ல வகையில் குழந்தைகளை வளர்ப்பதற்குப் பெற்ருேர்களே முன்னின்று வழிகாட்டிகளாக அமைய