பக்கம்:மக்கட் செல்வம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 குழந்தையின் பது போன்று காணப்பட்டாலும் அச்சிரிப்பு மனதைப் பற்றியது அன்று என்றும் கூறியுள்ளார்கள். குழந்தை மன உணர்வின் வழி உறங்கும்போதுகூடச் சிரிப்பது: உண்டு. இதை நீ உன் குழந்தையிடம்கூடக் கண்டிருக் கிருய் என அடிக்கடி எழுதுவாயே! குழந்தை தன் உரு வைக் கண்ணுடியில் கண்டு சிரிக்கும் நாளைப் பிறந்த இருபத்தேழாவது வாரம் எனக்கணக்கிட்டிருக்கிறர்கள். மெள்ள மெள்ளப் புன்சிரிப்பு பெருஞ்சிரிப்பாகக் காலம். வளர வளர வளர்ந்துகொண்டே செல்லும். ஒரு ஆராய்ச்சியாளர் குழந்தை காற்பது நாட்களுக்குப்பிறகே வாய்விட்டுச் சிரிக்கும் என்கின்ருர். எனினும் பொருள் களைக் கண்டு நகைப்பதையும் ஒலிகேட்டு நகைப்பதை யும் சற்று வளர்ந்த குழந்தைகளின் செயல்களாகவே கூறுவர். எப்படியாயினும் குழந்தையின் புன்சிரிப்பும்: பெருநகையும் அதன் மனவளர்ச்சிக்கு ஏற்பவே. அமைந்து மெள்ள மெள்ள வளர்கின்றன என்பது தேற்றம். பிள்ளைத் தமிழில் முத்தப் பருவம் என்று உண்டு குழந்தையை முத்தம் தருமாறு வேண்டுவது அது. முத்தம் தருவதும் மனவளர்ச்சியின் அறிகுறியே. தாய் எத்தனே தடவை முத்தம் தந்தாலும் இளங் குழந்தைகள் திரும்பித் தருவதில்லை. முத்தத்தின் சிறப்போ தேவையோ குழந்தை அறியாதது. கொடுக்கும் முத்தத்தை அது ஏற்றுக்கொள்ளும். எனினும் அது திரும்பி முத்தம் கொடுக்கக் குறைந்தது ஒரு ஆண்டு ஆகும். அதுவரை யில் அதள் மனது அம்முத்தம் பற்றி எண்ணி எண்ணி ஆய்ந்திருக்கு மல்லவோ? பிறகு அந்த உணர்ச்சி மெள்ள மெள்ள வெளிவரும். முத்தத்திற்குப் பதில் முத்தம் தருவதாக அமையும் நன்றி உணர்ச்சி பிள்ளை உள்ளத்தே அதன் முப்பத்து