பக்கம்:மக்கட் செல்வம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன வளர்ச்சி

121


நான்காவது மாதத்தில் வளரும் என்பர் ஆய்வாளர். எனவே உயர்ந்ததாகிய நன்றியதலெனும் பண்பாடு மூன்றாம் ஆண்டு நிரம்பாத முன்பே பிள்ளை உள்ளத்து இடம்பெறும் என்று அறிதல் வேண்டும்.

இவைபோன்றே குழந்தை அழுவதும் மன உணர்வை எடுத்துக்காட்டுவது என்பது நான் உனக்குச்சொல்லாமலேயே விளங்குமல்லவா! அழுகை பெரிதாகும்போது தலையை அசைப்பதும், காலை உதைப்பதுமாகிய பல்வேறு செயல்களைக் காண்கின்றோம். சிறுகுழந்தை அழாதபோதுகூட, அடிக்கடி காலையும் கையையும் ஆட்டியும் உதைத்தும் வேடிக்கை காட்டுவதுபோன்று தொழில்படுவதையும் காண்கின்றோம். அவையெல்லாம் மன உணர்வின்வழி உருவாகும் செயல்களே எனக் கொள்ளல் பொருந்துவதாகும். குழந்தைகள் உடற்றசையின் அசைவு முதலியனவற்றின் செயல்களெல்லாம் பெரும்பாலும் மன உணர்வின் வழிப்பட்டனவே என்பர் அறிந்தோர். குழந்தையின் புலன்கள் வழிப்பெறும் மன உணர்வும் அம்மனத்தின் ஆணைவழித் தொழில்படும் புறச்செயல்களும் எண்ணில் அடங்கா. குழந்தையின் வளர்ச்சியில் ஒவ்வொரு சிறு செயலும் பொருள் உள்ளதேயாகும். அவற்றையெல்லாம் ஆய்ந்துகான ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தேவை. அத்துடன் நாமும் அக்குழந்தைகளேப் போன்று குழந்தையுள்ளம் பெற்றவராக வேண்டும். அக்குழந்தை உள்ளம் பெற்றவரே மக்களைப் பெற்றவர், மற்றல்லாதார்யாரோ இன்று இத்துடன் அமைகின்றேன்.

அன்புள்ள,

அப்பா