பக்கம்:மக்கட் செல்வம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடித்தா? அணைத்தா ?

123


காரணங்களைச் சொல்லுவார்கள். முன் சில கடிதங்களில் நான் குறித்தபடி பரம்பரை அமைப்பும் சுற்றும் சார்பு நிலையுமே குழந்தைகளைப் பல்வேறு நிலையில் வளரச்செய்கின்றன. நல்ல பரம்பரைகளில் சில நலம் கெட்ட குழந்தைகளும், கெட்ட பரம்பரையில் முத்துச் சிப்பிகளும் பிறக்கின்றன என்றாலும், அவற்றை விதி விலக்காகத்தான் கொள்ளவேண்டும் என்பர் ஆராய்ந்த அறிஞர்கள். சுற்றுச் சார்பு குழந்தை வளர்ப்பில் முக்கிய இடம் பெறுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் இங்கே சென்னையிலேயே உள்ள சில செல்வர்கள் முறையாக நடக்கும் சில பள்ளிவிடுதி களில் தத்தம் குழந்தைகளே இரவுபகல் எந்தநேரமும் தங்க விட்டுவிடுகின்றனர். தம் பிள்ளைகளுக்குச் சில வசதிகள் குறைந்தாலும் விடுதிகளின் நல்ல சூழ்நிலையில் அவை ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளரும் என நம்புகிருர்கள். இந்த நம்பிக்கை பெரும்பாலும் வெற்றி பெறுவதையும் காண்கின்றோம். எனினும் பெற்றவர்களில் சில நல்லவர் அவ்வாறு அனுப்பாது, தமக்குப் பல இடர்கள் இருந்தபோதிலும் அவற்றை வெளிக்காட்டாது, குழந்தைகளுக்கு ஏற்ற சூழ்நிலையை அமைத்துக் கொண்டு அவர்களைப் பிரிய மனமில்லாது தம் வீட்டிலேயே வைத்து வளர்ப்பார்கள். அதுவே சிறந்த பண்பாகும். - அவ்வாறு குழந்தை வளர்ப்பதில்தான் பெறும் பொறுப்பு, பெற்றவர்களுக்கு-சிறப்பாகத் தாய்க்கு - அமைகின்றது. தனது ஆசைகளை யெல்லாம் அடக்கிக் கொண்டு, குழந்தையின் நலமே தன்னலம் எனக்கருதி, வாழ்வையே தியாகவாழ்வாகச் செய்து சிறக்க வேண் டியதே தாய்மை அன்பாகும். இது பற்றி முன் ஒரு கடிதத்தில்கூட உனக்கு விளக்கியிருக்கிறேன்.